அண்ணன் ஆதரவு! அப்பா ஆசியில் வளர்ந்த தனுஷுக்கு ஈகோ ஜாஸ்தி! ஓம் நவச்சிவாய! நயன்தாரா
சென்னை: ஓம் நமச்சிவாய என நடிகர் தனுஷ் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையை பயன்படுத்தியே நடிகை நயன்தாரா, காப்பிரைட் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் தீவிர சிவபக்தர், தனது கழுத்தில் கருங்காலி மாலையும் ருத்ராக்சமும் அணிந்துள்ளார். அவர் அடிக்கடி சிவனை பற்றியும் ஓம் நமச்சிவாய மந்திரத்தையும் பயன்படுத்துவார். அந்த வார்த்தையை குறிப்பிட்டே நயன்தாரா கண்டித்துள்ளார்.

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடிதான் பட ஷூட்டிங்கின் போது காதலித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணம் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது இரு ஆண்டுகள் கழித்து இந்த திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளின் ஆவணப்படம் வரும் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் நயன்தாரா காட்டப்பட்டுள்ளார். நயன்தாரா குறித்து நடிகை ராதிகா, நாகார்ஜுனா, அட்லி உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர். இந்த டாக்குமென்டரியில் தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்ற தங்கமே உன்னை தான் என்ற பாடலின் வரிகள் 3 வினாடிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த வரிகளை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்கு ரூ 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ், நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை கண்டித்து நடிகை நயன்தாரா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்புக்குரிய மிஸ்டர் தனுஷ் கே ராஜா, தவறான விஷயங்களை சரி செய்ய உங்களுக்கான பகிரங்க கடிதம் இது. தந்தையின் ஆசியாலும் அண்ணன் செல்வராகவனின் ஆதரவாலும் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வளர்ந்துள்ள நீங்கள் இந்த கடிதத்தை படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
சினிமாவில் தக்க வைத்துக் கொள்ள என்னை போன்றவர்கள் தினமும் போராடுகிறார்கள். இது நாம் அனைவரும் அறிந்ததே. சினிமா துறையில் உங்களுக்கு கிடைத்தது போல் எனக்கென எந்த ஆதரவும் இல்லாமல் நான் சுயம்புவாக போராடி முன்னணி நடிகையாக, அசைக்க முடியாதவராக நிற்கிறேன்.
எனது திருமணம் தொடர்பான டாக்குமென்டரி படத்தை காண நான் மட்டுமில்லை, எனது நலம் விரும்பிகளும் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். என் மீதும் என் கணவர் மீதும் அந்த டாக்குமென்டரி மீதும் நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பு.
திரைத்துறையில் உள்ளவர்கள் வாழ்வாதாரம், சுதந்திரம், உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்தும் அரசராக ஒரு தயாரிப்பாளர் இருக்க முடியுமா? நானும் ரவுடிதான் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் நீங்கள் இந்த உலகில் முகமூடி அணிந்து கொண்டுள்ளீர்கள்.
தயாரிப்பாளராக வெற்றியடைந்த நானும் ரவுடிதான் படம் குறித்து நீங்கள் என்னென்ன சொன்னீர்கள் என்பதை நான் இன்னும் மறக்கவில்லை. அந்த படம் ரிலீஸுக்கு முன்பே நீங்கள் சொன்ன வார்த்தைகள் எல்லாம் எங்களுக்கு ஆறாத வடுக்களாக இருக்கிறது.
உங்கள் தயாரிப்பில் என் கணவர் இயக்கத்தில் வெளியான அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது உங்கள் ஈகோவால் ஏற்க முடியவில்லை என்பதை நான் எனது திரைத் துறை வட்டாரங்கள் மூலம் அறிந்தேன். இது போன்ற கொடுங்கோலை தமிழக மக்களோ மற்றவர்களோ ஏற்க மாட்டார்கள். எங்கள் ஆவணப்படத்தை பாருங்கள். அப்போது உங்கள் மனம் மாறும். இவ்வாறு குறிப்பிட்ட நடிகை நயன்தாரா, தனுஷ் எப்போதும் பயன்படுத்தும் ஓம் நமச்சிவாய என குறிப்பிட்டு தனது 3 பக்க அறிக்கையை முடித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications