ஹேய் **** என்னடா பண்ணி இருக்க? காட்டு கத்து கத்திய பெண்.. நயன்தாரா கல்யாண ஓட்டலுக்கு வெளியே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நடந்த ஹோட்டலுக்கு வெளியே ஏற்பட்ட மோதல் ஒன்றால் அந்த பகுதியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரபலங்கள் மட்டும் வரவேற்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக விழா நடைபெற்றது.

மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் போன்ற பெரும் பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையில் திருமணம் நடைபெற்ற ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பிற்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் நிற்க வைக்கப்பட்டு இருந்தனர். பிரபலங்கள் பலர் வந்ததால் அங்கு ரசிகர்கள் பலர் கூட்டமாக கூடினர். இவர்களை கட்டுப்படுத்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். ஆனாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

போலீஸ் குவிப்பு

போலீஸ் குவிப்பு

இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த சாலையில் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டது. இரண்டு கார்கள் வெவ்வேறு இடங்களில் மோதி விபத்துக்கு உள்ளாகின. அதேபோல் இன்னொரு இடத்தில் கார் ஒன்று சிறிய ரக டெம்போவில் மோதி விபத்துக்கு உள்ளானது. போக்குவரத்து நெரிசலால் இந்த விபத்து ஏற்பட்டது.

Recommended Video

    Nayanthara Wedding | அடம்பிடித்த நரிக்குறவ சிறுவன் ! *Celebrity | Filmibeat Tamil
    விபத்து

    விபத்து

    அதேபோல் திருமணம் நடைபெற்ற மண்டபத்திற்கு 100 மீட்டர் வெளியே பெண்ணின் கார் ஒன்றில் இளைஞர் ஒருவர் காரை விட்டு தவறுதலாக மோதினார். ஈசிஆர் என்பதால் வேகமாக வந்தவர்.. திடீரென மண்டபம் அருகே இருந்த கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர் பிரேக் போட முயன்று உள்ளார். ஆனாலும் கார் வந்த வேகத்தில், முன்னாள் இருந்த பெண் ஒருவரின் எஸ்யுவி ரக காரில் சென்று பளார் என்று மோதியது.

    நயன்தாரா விக்னேஷ் சிவன்

    நயன்தாரா விக்னேஷ் சிவன்

    இதையடுத்து காரில் இருந்து வெளியே வந்த பெண்.. விபத்து ஏற்படுத்திய நபரை பிடித்து.. ஹேய் என்று திட்டி.. சில கெட்ட வார்த்தைகளால் கடுமையாக கேள்வி எழுப்பினார். என்னடா என் காரை பண்ணி வச்சு இருக்க. என் கார் நாசமாகிவிட்டது. என் கார் பின்பக்கம் மொத்தமாக நாசமாகிவிட்டது . நீ என்ன பதில் சொல்ல போற என்று கேட்டார். அவர் தொடர்ந்து ஆங்கிலத்தில் அந்த நபரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

    மோதல்

    மோதல்

    பதில் சொல்ல முடியாமல் விழித்த அந்த நபர்.. நான் சடர்ன் பிரேக்தான் போட்டேன் என்று சமாளித்தார். அதற்கு அந்த பெண்ணும், யோவ் சடர்ன் பிரேக் போட்டதெல்லாம் இருக்கட்டும். என் காருக்கு என்ன பதில் சொல்ல போற. மொத்தமா போச்சே என்று சண்டை போட்டார். இந்த சண்டை பெரிதானதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நடந்த ஹோட்டலுக்கு வெளியே ஏற்பட்ட இந்த மோதலால் அந்த பகுதியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+