Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய மகளிர் ஆணையம் என்ட்ரி.. மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்திய அதிகாரிகள் மீது ஆக்‌ஷன் எடுக்க ஆணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய பாதுகாப்பும் மருத்துவ வசதியும் செய்து தர தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அந்த மாணவரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டது.

anna university

இந்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தி, இந்த சம்பவத்தில் ஒருவரை நேற்று கைது செய்தனர். கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் (37), கோட்டூர்புரம் மண்டபம் பகுதியில் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர், பிரியாணி கடையில் விற்பனை முடிந்ததும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காட்டுப்பகுதிகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் தனிமையில் இருக்கும் காதலர்களை மொபைலில் படம் பிடித்து மிரட்டி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழிபறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஞானசேகரன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது விழுந்து கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவரது தோழியும் ஞானசேகரனால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டம். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பெண்ணின் பெயர், முகவரியுடன் கூடிய எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீதான முந்தைய வழக்குகளில் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது கவலை அளிக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்காக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்காக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் தமிழக காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவருக்கு இலவச மருத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கும்வகையிலான BNS, 2023 இன் பிரிவு 71ஐ FIR இல் சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கமான குற்றவாளி என்பதை தேசிய மகளிர் ஆணையம் எடுத்துக்காட்டுகிறது, தமிழ்நாடு காவல்துறை முந்தைய வழக்குகளில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. இந்த அலட்சியம் அவரை இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டியுள்ளது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றிய தீவிர கவலையை இது எழுப்புகிறது என தேசிய மகளிர் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+