உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுங்க.. தஞ்சையில் பேசியது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தின் போது மகளிர் குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெக வழக்கறிஞர் ஆதித்ய சோழன் கடந்த 4 ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கடந்த 3 ஆம் தேதி தஞ்சையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடாத தமிழக அரசை கண்டித்தும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதிப்பதாகவும், விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக்கோரியும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Udhayanidhi Stalin

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சையாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நடிகை குறித்து சர்ச்சையாக பேசினார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் வீட்டில் இருந்த உதயநிதி ஸ்டாலினை போலீசார் வேனில் 8 மணி நேரம் அழைத்து சென்று தஞ்சையில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னவர் அவர் விசாரணைக்கு பிறகு ஒரு மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டார். இந்த கைது நடவடிக்கை காமெடியாக இருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.

மேலும் நான் சர்ச்சையாக எதுவும் பேசவில்லை. பெண்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. நான் கைது நடவடிக்கைக்கு அஞ்சுவதில்லை. இந்த மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என பேசியிருந்தார். இதற்கிடையே தஞ்சை ஆர்ப்பாட்டத்தின் போது மகளிர் குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெக வழக்கறிஞர் ஆதித்ய சோழன் கடந்த 4 ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் பேசியது திரிஷா பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த புகாரில் தவெக வழக்கறிஞர் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+