தாமரை or குக்கர்.. ஓ பன்னீர் செல்வம் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவாரா? பாஜக வழங்கிய 2 ஆஃபர்
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு பாஜக 2 ஆப்ஷன்களை வழங்கி உள்ளது. ஆனால் தற்போது வரை அந்த ஆப்ஷன்களை ஓ பன்னீர் செல்வம் ஏற்காத நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் தான் பாஜக வழங்கிய 2 ஆப்ஷன்கள் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர்களை ஒன்றிணைத்து போட்டியிட பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளது.

ஆனால் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இன்னும் இந்த கூட்டணியில் இணையவில்லை. அவர் தனது கூட்டணி நிலைப்பாடு பற்றி வெளிப்படையாக தெரியாகவில்லை. இருப்பினும் அவர் அதிமுக - பாஜக கூட்டணியில் இணையலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை பாஜக சார்பில் ஓ பன்னீர் செல்வம் உடன் நடத்தப்பட்டு வருகிறது.
ஓ பன்னீர் செல்வத்துக்கு 2 ஆப்ஷன்கள்
இந்நிலையில் தான் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய ஓ பன்னீர் செல்வத்துக்கு பாஜக சார்பில் 2 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஓ பன்னீர் செல்வம் தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். இப்படியான சூழலில் தான் ஓ பன்னீர் செல்வத்துக்கு வழங்கப்பட்ட ஆப்ஷன்கள் பற்றி பாஜக தலைவர் ஒருவர் கூறியதாவது:
குக்கர் அல்லது தாமரை
‛‛பாஜக கூட்டணியில் வருவதற்கு ஓ பன்னீர் செல்வத்துக்கு 2 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. அவர் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் குக்கர் சின்னத்தில் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் சுயேச்சையாக பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியி வேண்டும்.
இந்த 2 ஆப்ஷன்களில் ஒன்றை ஓ பன்னீர் செல்வம் ஏற்றால் அவருக்கு மதுரை, தேனி மாவட்ங்களில் 2 அல்லது 3 சட்டசபை தொகுதிகள் வழங்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
ஓபிஎஸ் என்ன நினைக்கிறார்?
ஓ பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இல்லாவிட்டால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் ஓ பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவோ, இரட்டை இலை சின்னத்தில் அவரை போட்டியிட வைக்கவோ கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை. இதனை அவர் நேரடியாக பாஜகவிடம் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் கருத்து
இதனால் தான் ஒன்று அமமுகவின் குக்கர் சின்னம் அல்லது பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டு அதிமுக - பகஜா கூட்டணியில் சேர வேண்டும் என்று 2 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது அவர் கருத்து சொல்ல மறுத்துவிட்டார். அதேவேளையில், ‛‛அதிமுகவில் அனைவரும் ஓரணியில் இணைந்து களமிறங்க வேண்டும்'' என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.
டிடிவி தினகரன் சொன்ன கருத்து
அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் கேட்டபோது, ‛‛ஓ பன்னீர் செல்வம் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும். அவர் இணைவார் என்று நம்புகிறேன். அதிமுகவில் அவர் 3 முறை முதல்வராக இருந்துள்ளார்.
இதனால் கட்சிக்கு அவர் நன்றிகடனை திரும்ப செலுத்தும் தேவை உள்ளது. இன்று முதன்மையான தேவை என்னவென்றால் அதிமுகவின் பிரிந்த சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அதுதான் என் கோரிக்கையாகவும் இருக்கிறது'' என்றார்.
ஓபிஎஸ் முடிவு என்ன?
இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் தேனியில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கூட்டணி நிலைப்பாடு பற்றி அறிவிக்க உள்ளார். இதனால் ஓ பன்னீர் செல்வத்தின் மூவ் அதிக கவனம் பெற்றுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications