"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி!
சென்னை: அதிமுக தலைமயைிலான என்டிஏ கூட்டணியில் புதிதாக சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. இந்த கட்சிக்கு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கீடு செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகளுக்கும், பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11, தமாகாவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர பிற கூட்டணி கட்சிகளுக்கு ஒன்று, இரண்டு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது போக மீதமுள்ள 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிட முடிவெடுத்துள்ளது. அதன்படி 150 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிதமுக-விற்கு மண்ணச்சநல்லூர்
இந்நிலையில் தான் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சியாக சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் சேர்ந்துள்ளது. நேற்றைய தினம் அந்த கட்சியின் தலைவர் ஆர்வி பரதன், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேசினார். இதையடுத்து இன்று சிங்க தமிழர் முன்னேற்ற கழகத்துக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
75,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
இதுபற்றி சிங்க தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஆர்வி பரதன் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களுக்கு மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளார். தலைவர் என்ற முறையில் அவருடன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டேன்.
வரும், சட்டசபை தேர்தலில் மத்திய மண்டலத்தில் எங்களுடன் பயணிக்க கூடிய அனைத்து கூட்டணி கட்சிகளையும் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அயராது பாடுபடுவோம். மண்ணச்சநல்லூர் தொகுதியில் நாங்கள் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
இரட்டை இலையில் போட்டி
மண்ணச்சநல்லூரில் நாங்கள் ஈஸியாக ஜெயிப்போம். ஏனென்றால் அங்குநாங்கள் வலுவான சக்தியாக இருக்கிறோம். எங்களின் சிங்க தமிழர் முன்னேற்ற கழகத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர்'' என்றார். சிங்க தமிழர் முன்னேற்ற கழகத்துக்கு தனி சின்னம் கிடையாது. இதனால் அந்த கட்சி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளது.
தொகுதியின் பின்னணி
இந்த மண்ணச்சநல்லூர் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக சீ. கதிரவன் உள்ளார். இவர் திமுகவை சேர்ந்தவர். கடந்த 2021 தேர்தலில் கதிரவன் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 334 ஓட்டுகளை பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுகவின் பரஞ்சோதி 56,716 ஓட்டுகளை பெற்றார். இதனால் திமுக வேட்பாளர் கதிரவன் 59,618 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications