ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன. கடந்த ஆண்டே இந்த கூட்டணி உறுதியான நிலையில் இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமியுடன், பாஜகவின் பியூஸ் கோயல், அமித்ஷா பலமுறை சந்தித்தும் கூட இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் தான் அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை எடப்பாடி பழனிசாமி இழுத்தடிப்பது ஏன்? தவெகவை எடப்பாடி பழனிசாமி விரும்பாதது ஏன்? என்பதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. வரும் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுக தனது கூட்டணியில் அனைத்து கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஆனால் அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக நடக்கவில்லை. கடந்த ஆண்டே அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. தமிழக பாஜகவிற்கு தேர்தல் பார்வையாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். பியூஷ் கோயல் பலமுறை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். அதேபோல் அமித்ஷா - எடப்பாடி பழனிச்சாமி இடையே பலமுறை சந்திப்புகள் நடந்துவிட்டன.
அதிமுக - பாஜகவில் இழுபறி
அதேபோல் பிரதமர் மோடி 3 பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டார். இருப்பினும் கூட இருகட்சிகள் இடையே இன்னும் தொகுதி பங்கீடு நடக்கவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுத்தடிக்கப்படுவதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக வெற்றி தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். ஆனால் பாஜக கூட்டணி ஆட்சியை விரும்புகிறது. இதனால் தான் மேடைகளில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளர் என்று முன்னிறுத்தாமல் இருப்பதோடு, என்டிஏ ஆட்சி அமைக்கும் என்று பேசி வருகின்றனர். பாஜகவின் இந்த நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை.
எடப்பாடியின் திட்டம் என்ன?
அதேவேளையில் பாஜகவை கூட்டணியில் இருந்தும் கழற்றிவிட எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை. எப்படியாவது பாஜகவை சமாளித்து தேர்தலில் வெற்றி பெற்று தனித்து அதிமுகவை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இதற்காக அவர்கள் காய்களை நகர்த்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 117 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இதனால் குறைந்தபட்சம் 160 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். மீதமுள்ள 74 தொகுதிகளை தான் கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்பட பிற கட்சிகளுக்கு வழங்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். ஆனால் பாஜகவோ எப்படியாவது கூட்டணி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் கூடுதல் இடங்களை கேட்கிறதாம்.
160 தொகுதிகளில் அதிமுக டார்கெட்
இதனை வழங்கினால் அதிமுகவால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியாது. தனிப்பெரும்பான்மை இன்றி கூட்டணியில் உள்ள பிற கட்சி எம்எல்ஏக்களின் தயவில் தான் ஆட்சி அமைக்கும் நிலை வரலாம். இந்த பிரச்சனை தான் அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்படாததற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதுதவிர பாமக உள்பட பிற கட்சிகளுக்கு அதிமுக தொகுதிகளை பிரித்து வழங்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இதுத போதாது என்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணிக்கு கொண்டு வர பாஜக நினைக்கிறது. அதிமுக குறைந்தது 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதன்மூலம் அதிமுகவால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும்.
அதிமுகவினர் கூறுவது என்ன?
இதுபற்றி அதிமுகவி வட்டாரங்கள் கூறுகையில், ''பாஜக அதிக இடங்களைக் கோருகிறது. அதுமட்டுமின்றி பிற கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளையும் தாங்களே நிர்ணயம் செய்வோம் என்று பாஜக கூறுகிறது. இதன்மூலம் அதிமுகவின் இடத்தை குறைத்து தேர்தலுக்கு பிறகு கூட்டணி ஆட்சிக்கு பாஜக திட்டமிடுகிறது.
இது எடப்பாடி பழனிசாமி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முடிவை பாதிக்கலாம். இதனால் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்வில்லை. மேலும் கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்த்தால் அதிமுக போட்டியிடும் இடங்களை குறைக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தான்
புதிய கட்சிகளைச் சேர்ப்பதிலும் எடப்பாடி பழனிச்சாமி நிதானம் காட்டுகிறார்.
தவெகவை விரும்பாத எடப்பாடி
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் இணைக்க பாஜக முனைப்பு காட்டும் நிலையில் அதில் எடப்பாடி பழனிச்சாமி ஆர்வம் காட்டவில்லை. அதேபோல் விஜய்க்கு துணை முதல்வர் பதவியும், தவெகவிற்கு 40 முதல் 50 தொகுதிகள் என்ற பேச்சு எடப்பாடி பழனிசாமியை கலக்கமடைய செய்துள்ளது.
விஜயின் தவெக இன்னும் தேர்தலில் களம் காணவில்லை. அவர் ஓட்டு வங்கியை நிரூபிக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். அதேவேளையில் தவெகவை உள்ளே கொண்டு வந்தால் அதிமுகவின் இடத்தை குறைத்து கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக திட்டமிடுகிறது'' என்கின்றனர் அதிமுகவினர். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்!












Click it and Unblock the Notifications