NDA கூட்டணிக்கு எவ்ளோ வலிமை? மேடையில் இருந்த கூட்டணி கட்சிகள்! கடந்த தேர்தல் வாக்கு சதவீதம் எவ்வளவு?
சென்னை: என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று மதுராந்தகத்தில் நடைபெற்ற NDA பொதுக்கூட்டத்தில் மேடையேறினர். என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் பற்றிப் பார்க்கலாம். அதிமுக கூட்டணியில் தற்போது இடம்பெற்றுள்ள கட்சிகள் கடந்த தேர்தலில் சுமார் 44% வாக்குகளைப் பெற்றுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட மேடையில் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். பிரதமர் மோடியின் அருகில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார்.

மேடையில் கூட்டணி கட்சிகள்
மேலும் இந்த மேடையில், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தென்னிந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சி தலைவர் திருமாறன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் பிரதமர் மோடியுடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
கூட்டணி கட்சிகள் வாக்கு சதவீதம்
என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்ற கட்சிகள் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் வருமாறு:
அதிமுக கடந்த 2021ல் 33.29% வாக்குகளைப் பெற்றது. அந்தக் கட்சியானது 1 கோடியே 43 லட்சத்து 85 ஆயிரத்து 410 வாக்குகளைப் பெற்றது. மொத்தம் 65 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இவற்றில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2.62 வாக்கு சதவீதத்தைப் பெற்றது.
பாமக - பாஜக
தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டு சுமார் 3.80% வாக்கு சதவீதத்தைப் பெற்றது. 5 இடங்களில் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) சுமார் 2.4% வாக்கு சதவீதத்தைப் பெற்றது. இந்தக் கட்சி 165 தொகுதிகளில் போட்டியிட்டு, பெரும்பாலான இடங்களில் டெபாசிட் இழந்தது. கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்ட நிலையில் அங்கு மட்டும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் புதிய நீதிக் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் வெற்றி இல்லை. மொத்தமாக 0.1%க்கும் குறைவான வாக்கு சதவீதம் பெற்றது.
வாக்கு சதவீதம்
2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக - பாஜக தலைமையிலான தேஜ கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி அதிமுக தலைமையிலான NDA கூட்டணி சார்பில் போட்டியிட்டது. கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட்டு 48.57% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. புரட்சி பாரதம் கட்சி பெற்ற மொத்த வாக்கு சதவீதம் 0.2%க்கும் குறைவு.
ஆகமொத்தம், அதிமுக கூட்டணி கட்சிகள் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சுமார் 44% வாக்குகளைப் பெற்றுள்ளன. தற்போது 2026 சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவப்போகும் சூழலில் 45% வாக்குகள் கிட்டத்தட்ட வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் தன்மை கொண்டது. எனவே, இந்தக் கூட்டணி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
-
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications