வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் - சரத்குமாரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்குமா
வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் நிற்கின்ற தொகுதிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்க முடியாமல் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாமல் உள்ளதாக சரத்குமார் கூறியுள்ளார். மாநில தேர்தல் ஆணையமும் , இந்திய தேர்தல் ஆணையமும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம், புதிய தமிழகம் என இந்த முறை சட்டசபைத் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதிமுக, திமுக வேட்பாளர்கள் பல தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இந்த நிலையில் சமக தலைவர் சரத்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். சென்னை: சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் நிற்கின்ற தொகுதிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்க முடியாமல் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாமல் உள்ளதாக சரத்குமார் கூறியுள்ளார். மாநில தேர்தல் ஆணையமும் , இந்திய தேர்தல் ஆணையமும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென சமக தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம், புதிய தமிழகம் என இந்த முறை சட்டசபைத் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதிமுக, திமுக வேட்பாளர்கள் பல தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இந்த நிலையில் சமக தலைவர் சரத்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மார்ச் 12ஆம் தேதி முதல் துவங்கப்பட்ட வேட்புமனு தாக்கல் ஆனது மார்ச் 19ஆம் தேதி அன்றுடன் முடிவடைய உள்ள சூழலில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் , புதிய வங்கி கணக்கு துவங்க முடியாமல் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்களை தேர்தல் ஆணையம் அறியும்.

வேட்பாளர்கள் தடுமாற்றம்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மொத்தம் ஆறு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் கடந்து இன்னும் நான்கு நாட்களே உள்ளது. அதிலும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராடும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் வேட்பாளர்கள் தாங்கள் நிற்கின்ற தொகுதிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்க முடியாமல் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாமல் உள்ளார்கள்.

வேட்பாளர்களுக்கு வாய்ப்பு
ஜனநாயக முறைப்படி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுவது உறுதி செய்வதுடன் அனைத்து வேட்பாளர்களும் போட்டியிடுவதற்கு ஏற்ற சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

கூடுதல் கால அவகாசம் தேவை
எனவே மாநில தேர்தல் ஆணையமும் , இந்திய தேர்தல் ஆணையமும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சரத்குமார் ராதிகா
40 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் 3 தொகுதிகளை திருப்பிக்கொடுத்து விட்டது சமத்துவ மக்கள் கட்சி. ராதிகாவும், சரத்குமாரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போது 37 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டும் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சரத்குமாரின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் கால அவகாசம் தருமா? பார்க்கலாம்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications