புதுக்கோட்டையில் ஜாதி பாகுபாடு! பட்டியலினத்தவர் மீது கஞ்சா போதையில் தாக்குதல்! நீலம் பண்பாட்டு மையம்
சென்னை: புதுக்கோட்டையில் பட்டியலினத்தவரை மது, கஞ்சா போதையால் பணத்தை பறித்து அவரை கடுமையாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் வெளியான எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் நீலம் பண்பாட்டுமையம் செயல்வீரர் அம்பேத்கர் நகர், பட்டியல் சமூகத்தை சேர்ந்த முருகானந்தம் (பொறியாளர்) வீட்டு water Proofing வேலை செய்து நிறைவு பெற்று சம்பளம் ரூ.13,500 பணத்தை வாங்கி வீடு திரும்பும் போது திடீரென குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத கஞ்சா, மது அருந்திய 4 நபர்கள் அடித்து கொலை முயற்சி செய்தும், குற்றவாளிகள் பணத்தை திருடிச் சென்ற சம்பவத்தை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாக கண்டிக்கின்றது!

அவர் 18.01.2024 அன்று புதுக்கோட்டை நகரம் அம்பேத்கர் நகரிலிருந்து 20 km தொலைவில் உள்ள புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில் நண்பகல் 3.15 மணிக்கு தனது நிறைவு பெற்ற பணியின் சம்பளம் ரூ13,500 தொகையை பாக்கெட்டில் வைத்து வந்துள்ளனர், அப்பகுதியில் சிறுநீர் கழிக்கும் போது தீடீரென அடையாளம் தெரியாத கஞ்சா, மது அருந்திய 4 பேர் கொண்ட கும்பல் முருகானந்தம் அவர்களை எந்த ஊர் என்று கேட்டு மிரட்டி அவரை கீழே தள்ளி அடித்து மொத்த பணத்தையும் திருடி உள்ளனர், தலையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,.
பணத்தை திருடியவர்கள் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று நடந்த பிரச்சினையை எடுத்து கூறிய முருகானந்தம் தற்சமயம் 4 நபர்கள் முருகானந்தம் உடன் வந்த தியாகு என்பவரையும் அடித்துள்ளனர்.

தற்போது மூன்றாவது நாளாக முருகானந்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தியாகுவை வண்டியில் அழைத்து சென்று அடித்துள்ளனர். அவரும் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். நேற்று காவல்துறை முழு வாக்குமூலம் பெற்றுள்ளனர். 4 நபர்களுக்கும் 21 வயது தான் ஆகிறது இந்த வயதில் தான் சாதியவாதிகள் ஒவ்வொரு பகுதியிலும் கஞ்சா ,மது அருந்திய சுற்றி வருகின்றனர். இது சமூகத்திற்கும் , குடும்பத்திற்கும் ஆபத்தானது.
தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு களப் பணியாற்றி வரும் எங்கள் செயல்வீரருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் விரைந்து கொலை முயற்சி, பணம் திருடிய சாதிய குற்றவாளிகளை உடனடியாக #SC_St வன்கொடுமை_தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்ய வேண்டும்.
அன்பு சகோதரர் முருகானந்தம் விரைந்து முழு குணமடைந்து மீண்டும் சமூக பணிக்கு வர வேண்டும், நம் அனைவரும் துணை நிற்கிறோம்! இவ்வாறு அந்த நீலம் பண்பாட்டு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications