Neet results 2025: சபாஷ்! நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் 6 தமிழக மாணவர்கள்! யார் அவர்கள்?
டெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 6 மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் யார், எந்த ரேங்கில் உள்ளார்கள் என்பதை பார்க்கலாம். நீட் தேர்வு, மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ், பல் மருத்துவ படிப்பான பிடிஎஸ்ஸுக்கு நடத்தப்படுகிறது.

நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் 27ஆவது இடத்தை சூரிய நாராயணன், 50 ஆவது இடத்தை அபிநித் நாகராஜன், 61 ஆவது இடத்தை புகழேந்தி, 63 ஆவது இடத்தை ஹிருதிக் விஜயராஜா, 78 ஆவது இடத்தை ராகேஷ், 88 ஆவது இடத்தை பிரஜன் ஸ்ரீவாரி ஆகிய 6 தமிழக மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025- 2026 ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் எனும் நுழைவு தேர்வு மே 4ஆம் தேதி நடந்தது.
இந்திய முழுக்க 23 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். இந்த நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட்டது.
180 கேள்விகளைக் கொண்ட இந்த தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு சென்று NEET UG 2025 என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் விண்ணப்ப எண், பாஸ்வேர்ட் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். பிடிஎஃப்பாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங்கில் பங்கேற்க நீட் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும். அதன்படி 2024 ஆம் ஆண்டு பொதுப் பிரிவு போட்டியாளர்களுக்கான தகுதி 50 சதவீதமாகவும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுகளுக்கான தகுதி 40 சதவீதமாகவும் இருந்தது. மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண்களை பெற வேண்டும்.
இந்த தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ஆம் தேதி வெளியிட்டது. மாணவர்கள் இந்த விடைக்குறிப்பின் மீது தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில்தான் தேர்வு முடிவுகளும் தகுதி பட்டியலும் வெளியிடப்படும். இதுதான் நடைமுறை!
தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்களுக்கு எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வை நடத்தும்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications