நீட் எப்பவுமே குழப்பம்னா எப்படி?தமிழகத்தில் 744 பேர் அதிகமாக தேர்வு எழுதியதாக ரிசல்ட்டில் ஷாக் தகவல்
சென்னை: இளங்கலை மருத்துவ படிப்புகளுக்காக தேசியத் தேர்வு முகமை நடத்திய நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 744 மாணவர்கள் கூடுதலாக நீட் நுழைவுத் தேர்வு எழுதியிருப்பது எப்படி சாத்தியமாகும்? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 5-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டன. நீட் நுழைவுத் தேர்வு நடந்த போதே ஆள் மாறாட்டம், வினாத்தாள் விற்பனை மோசடி உள்ளிட்டவை வெளிச்சத்துக்கு வந்தன. இது தொடர்பாக கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் நீட் தேர்வு நடத்திய தேசியத் தேர்வு முகமையே சில ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கியது பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்குகள்: இதனையடுத்து நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த வழக்குகள் தொடரப்பட்டன.
சிபிஐ விசாரணை: இதனிடையே தேசியத் தேர்வு முகமை தலைவர் நீக்கப்பட்டார். நீட், நெட் உள்ளிட்ட தேர்வுகளின் முறைகேடுகளைத் தடுக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. மேலும் நீட் முறைகேடு வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து நீட் முறைகேடுகள் வழக்குகளில் இன்று வரை கைது நடவடிக்கைகள் தொடருகின்றன.
உச்சநீதிமன்றம் உத்தரவு: மேலும் நீட் முறைகேடு வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றமும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது. அத்துடன் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
நீட் தேர்வர்கள் எண்ணிக்கை: உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி 571 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 1,58,449. இதில் நீட் நுழைவுத் தேர்வை எழுதியவர்கள் எண்ணிக்கை 1,52,920. தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் எண்ணிக்கை 89,426.
நீட் முடிவுகளும் தமிழகமும்: ஆனால் தேசியத் தேர்வு முகமை நேற்று வெளியிட்ட நீட் தேர்வு முடிவுகளானது தமிழ்நாட்டில் மொத்தம் 1,53,664 பேர் தேர்வு எழுதியதாக தெரிவிக்கிறது. மேலும் சேலம், வேலூர் உள்ளிட்ட குறிப்பிட்ட நகரங்களின் சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் முழுமையான மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர்.
744 மாணவர்கள் கூடுதலாக எழுதியது எப்படி? : தமிழ்நாட்டில் 1,52,920 மாணவர்கள்தான் நீட் தேர்வை எழுதியவர்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நீட் ரிசல்ட்டில் மட்டும் 744 மாணவர்கள் எப்படி கூடுதலாக இடம் பெற்றனர்? என்பதுதான் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிற மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் கூட, 744 மாணவர்கள் கூடுதலாக இடம் பெற்றிருப்பதுதான் அதிர்ச்சிக்குரியது என்கின்றனர் கல்வியாளர்கள். நீட் நுழைவுத் தேர்வு தொடர்பான குழப்பங்கள் ஒருநாளும் ஓய்ந்ததாகவும் தெரியவில்லை. ஓயப்போவதாகவும் தெரியவில்லை. இதனால் தான் நாடு முழுவதும் நீட் எதிர்ப்புக் குரல்கள் வலுவடைந்து கொண்டே இருக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications