NEET : அண்ணாமலை அடித்துவிட்ட அத்தனையும் அண்டப் புளுகு- 56 இஞ்ச் திமிர்ப் பொய்- சீறிய சிபிஎம் கனகராஜ்
சென்னை: நீட் முதுகலை தேர்வில் 0 பெர்சன்டைல் தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த புள்ளி விவரங்கள் அத்தனையும் பொய் என சிபிஎம் மூத்த தலைவர் கனகராஜ், மத்திய அரசின் ஆவணங்களை சுட்டிக் காட்டி பதிலடி தந்துள்ளார்.
நீட் முதுகலை படிப்புக்கு 0 பெர்சன்டைல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு முறைக்கு இது சாவு மணி அடிக்கக் கூடியது என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, சில புள்ளி விவரங்களை வெளியிட்டு செய்தியாளர்களை சீண்டி இருந்தார்.
இதற்கு சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் கனகராஜ் தமது சமூக வலைதளப் பக்கத்தில் அளித்துள்ள பதில்: பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, கேள்வி கேட்பதற்கு முன்பாக, ரிசர்ஜ் பண்ணிவிட்டு வர வேண்டும், பி.ஹெச்.டி. படிச்சிட்டு வர வேண்டும், சயின்டிஸ்ட்டாக இருக்க வேண்டுமென்கிற ரேஞ்சில் திமிர்த்தனமாக பதில் சொல்லியிருக்கிறார். அந்த பதிலில் தான் ரிசர்ஜ் செய்து விட்டு வந்திருப்பதாக பேசியிருக்கிறார்.

அவருடைய கூற்றுப்படி,
கடந்தாண்டு இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.
கடந்தாண்டு கணக்குப்படி
எம்.பி.பி.எஸ். சீட்டுகள் -1,07,948 பி.ஜி.
அனைத்து வகை சீட்டுக்களும் சேர்த்து 67,842 .
இரண்டையும் கூட்டினால் கூட 1 லட்சத்து 80 ஆயிரம் வரவில்லை.
ஆனால் பி.ஜி.யில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரம் என்று அவர் ரிசர்ஜ் செய்து கண்டுபிடித்ததாகவும், அவருக்கு இதெல்லாம் தெரிருந்திருப்பதனால் தான் பத்திரிகையாளர்களை இடது கையால் டீல் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார்.
உண்மையில் அண்ணாமலையின் பேச்சுக்கள் தான் இடது கையால் டீல் செய்ய தக்கவை. (இதற்கு ஆதாரமாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களையும் கனகராஜ் இணைத்துள்ளார்).
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications