ஆவேசமாக பேசிய எம்எல்ஏக்கள்..பாஜக வெளிநடப்பு..எதிரொலித்த தமிழ்நாடு வாழ்க முழக்கம்! அனல் பறந்த சட்டசபை
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றிய இன்று கூடிய தமிழக சட்டசபை, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்தது.
Recommended Video
தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது தொடர்பாக சபையில் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். சபாநாயகராக இருந்து கொண்டு ஆளுநரை விமர்சிக்கக் கூடாது என்பது மரபு என கூறினார் அப்பாவு.
ஆனால் இயல்பாகவே தமிழக மக்களால் ஜீரணிக்க முடியாத ஆளுநர் திருப்பி அனுப்பியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்த வாதமும் சபாநாயகர் அப்பாவுவின் கேள்விகளில் எதிரொலித்தது. தமிழ் நிலத்தின் குடிமகன் என்ற வகையிலும் அப்பாவுவின் குரல்கள் ஏராளமான கேள்விகளை கண்ணியத்துடன் எழுப்பியது. ஆனால் தூங்குவது போல் நடிப்போர் மனசாட்சியை எப்படி தட்டி எழுப்ப முடியும்?

பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார். வெறும் 4 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாஜகவின் நயினார் நாகேந்திரன், குறுக்கிட்டுக் கொண்டே இருந்தார். சபாநாயகர் அப்பாவும், வெளிநடப்பு செய்யப் போறதுக்கு முன்னாடி எதுக்கு இந்த பில்டப் என பகிரங்கமாகவும் கேட்டுவிட்டார். ஆனால் ஏதோ சொல்லிவிட்டுப் போகனும் என்பதற்காக நயினார் நாகேந்திரன் எதையோ ஒன்றை சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்துவிட்டார். அவருடன் பாஜக எம்.எல்.ஏக்களும் வெளியேறினர்.

உஷ்ணம் குறையாத சபை
இதன்பின்னர் பூவை ஜெகன்மூர்த்தி, பண்ருட்டி வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, விசிக பாலாஜி என அடுத்தடுத்து பேசிய அனைவரும் மேடைப் பேச்சுகளில் நெருப்பை பறக்கவிடுகிறவர்கள். அதுவும் தமிழக சட்டசபை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய கொந்தளிப்பு ஏகமாய் அனைவரது பேச்சிலும் எதிரொலித்தது. கூடுதலாக கிராமப்புற மாணவர்கள், மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அடுத்த கட்ட பாய்ச்சலையும் அனைவரும் வெளிப்படுத்தினர். இப்படி உஷ்ணம் குறையாமல் போன சட்டசபை நிகழ்வில் அதிமுகவால் குறுக்கீடுகள், சர்ச்சைகள் வெடித்தன.

விஜயபாஸ்கரால் சர்ச்சை
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா மீது பேசாமல் பொதுக்கூட்டம் போல பேசத் தொடங்கினார். 1984-ம் ஆண்டு நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்பட்டது; 2005-ல் ஜெயலலிதாதான் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் என பேசினார். ஆனால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2006-ல் திமுக ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது என பதிலளித்தார். அப்போது ஜி.ஓ எல்லாம் இருக்கிறது என எடுத்துக் காட்டிய விஜயபாஸ்கரால் அமைச்சர் பொன்முடி எழுப்பிய கேள்வியால் திணறித்தான் போனார். கடைசிவரை பதிலே இல்லை. 1984-ல் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்பட்டது என்ற உண்மையை ஒப்புக் கொண்ட விஜயபாஸ்கர் அப்போது யாருடைய ஆட்சி என கேள்வி கேட்டார். எம்.ஜிஆர். ஆட்சி என்று அவரால் சொல்ல முடியாமல் அடுத்த சர்ச்சைக்குப் போனார்.

விவாதம்
நீட் என்பதையே இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் என பேச வந்தவருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்க சட்டசபை சலசலத்தது. சபை முன்னவரான துரைமுருகன் எழுந்து பிரச்சனையை முடித்துவிட்டு மசோதாவை நிறைவேற்றுவதற்கு வாங்க என்றார். அதேபோல் சபாநாயகர் அப்பாவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் மிரட்டி விஜயபாஸ்கரையும் முடித்து கொள்ளுங்க என்றார். இடையே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குறுக்கீடு செய்ய சற்றே கோபமானார் சபாநாயகர் அப்பாவு.

நீட் எனும் பலிபீடம்
பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெஞ்சத்திலேயே ஆறாத வடு தாங்கியவராய், 16 வயதில் அரசியலுக்கு வந்த என் வாழ்க்கையில் இன்று இந்த நாள் மறக்க முடியாத நாள் என குறிப்பிட்டு திராவிடர் பேரியக்க காலம் முதல் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா காலந்தொட்டு சமூக நீதி சரித்திரம் படைத்த சம்பவங்கள் இந்த சபையிலேயே நிகழ்ந்ததை பட்டியலிட்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து வரிக்கு வரி சட்டப்படியும் புள்ளி விவரங்களின்படியும் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் அத்துடன் நிற்கவில்லை. மாநில சுயாட்சி, தேசிய இனங்களின் உரிமை, ஆளுநர் பதவி தேவை இல்லாதது, நீட் எனும் பலிபீடத்தின் கோர முகம் என திராவிடர் இயக்க பாசறை நிகழ்வைப் போல சட்டசபையில் உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார். இறுதியாக தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! என மும்முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கம் எழுப்பியது யாரும் எதிர்பாராதது... சட்டசபை மட்டுமல்ல தமிழகமே ஒரு கணம் திகைப்பில் அதிர்ந்து மீண்டது.
-
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே












Click it and Unblock the Notifications