இன்று நீட் தேர்வு.. கடும் கட்டுப்பாடுகள் விதித்த NTA! ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்துறாங்களாமே!
சென்னை: 2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறவுள்ள நிலையில், முறைகேடுகளை தடுக்க தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை இன்று நடத்த உள்ளது.

இதற்கான அனுமதி அட்டைகள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியுடன் இணையதளத்தில் லாகின் செய்து பதிவிறக்கம் செய்துள்ளனர்.
நீட் தேர்வு: நாடு முழுவதும் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறுகிறது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்குச் சென்று தேர்வை எழுதுகின்றனர்.
கடும் கட்டுப்பாடுகள்: இந்த நிலையில் நீட் தேர்வு நடைபெறும் போது முறைகேடுகளை தவிர்க்க தேசிய தேர்வு முகமை கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையில் தெரிவித்திருக்கும் நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளனர். தேர்வு மையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வரவேண்டும் எனவும் அதற்குப் பிறகு வரும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் முன்னரே செல்வது நல்லது.
அனுமதியில்லை: மேலும் ஹால் டிக்கெட் அடையாளச் சான்று இல்லாத மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே தேர்வு எழுதும் பொருட்கள் அடையாள அட்டை ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றை எடுத்து தயாராக வைத்துக் கொள்வது நல்லது. மேலும் மாணவர்கள் நகைகள், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் பேனா, ப்ளூடூத், இயர் போன் ,பெல்ட், பர்ஸ், வாட்ச் என எதுவும் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
கழிவறைக்கு போக முடியாது: எளிதில் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்களை மட்டும் எடுத்துச் செல்லலாம். தேர்வு தொடங்கி முதல் ஒரு மணி நேரம் மற்றும் கடைசி அரை மணி நேரம் மாணவர்கள் கழிவறை செல்ல அனுமதி கிடையாது. பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் மதம் சார்ந்த ஆடைகள் அணிந்து வருவோர் சோதனைக்கு வசதியாக 12.30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும். உயரம் அதிகம் உள்ள ஷூக்களை அணிந்து வரக்கூடாது. மேலும் முழுக்கை சட்டை உள்ளிட்டவற்றையும் அணிந்து வரக்கூடாது என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பம்: மேலும் இந்த ஆண்டு பயோமெட்ரிக் ஆதென்டிஃபிகேஷன் முறை மூலம் மாணவர்களை அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தேர்வறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட இருக்கிறது மேலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications