நீட் ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணி நீடிக்கும்னு சொல்வீங்களா? எடப்பாடிக்கு ஸ்டாலின் சவால்
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜக உடன் கூட்டணி வைப்போம் என்று கூற முடியுமா என்று எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். எங்கள் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால் நீட் விலக்கு பெற்றிருப்போம் என்றும், நாங்கள் யாரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வை யார் கொண்டு வந்தது.. யார் கொண்டு வந்தது என்றும் அதனால் தான் இவ்வளவு சிக்கல் என்று கூறுகிறார். சரி இப்போது அந்த சிக்கலை சரி செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

நாங்க செய்தது சரியோ தவறோ அந்த விவாதத்திற்கு போகவில்லை. அந்த விவாதம் செய்யவில்லை. இப்போ இருக்கக் கூடிய நீட்டை ரத்து செய்தால் தான் நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருப்போம் இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுவோம் என்று சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா? இது தான் என் கேள்வி என்று கூறினார்.
வாக்குறுதி கொடுத்ததில் உண்மை தான். அதில் நான் எந்த விதமான மறுப்பையும் கூறவில்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் கண்டிப்பாக தொடர்ந்து வருவோம்(நீட் விலக்கு பெற்றிருப்போம்). ஆனால் நீங்க இப்போது கூட்டணி அமைத்திருக்கிறீர்களே.. இந்த ஒரு கண்டிஷனை சொல்லி உங்களால் கூட்டணி வைக்க முடியுமா இது தான் என் கேள்வி என்றார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்களை திமுக அரசு ஏமாற்றி விட்டதாக கூறினார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், "பாஜகவுடன் கூட்டணியே வைக்க மாட்டோம் என்று கடந்த 2 மாதத்துக்கு முன்பு சொல்லிவிட்டு இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறீர்களே நீங்கள் தான் மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள்" என்று ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications