நீட் தேர்வில் சாதனை: டாப் 10 பட்டியலில் 4 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள்.. ஒரே மார்க்! முழு லிஸ்ட் இதோ!
சென்னை: 2023ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் தமிழழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். முதல் 10 ரேங்க்கில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 20.38 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நீட் நுழைவுத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் 11,45,976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 53.3 ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் (51.2%) இந்த எண்ணிக்கை அதிகம். நீட் தேர்வை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் தேர்வு எழுதினர். இதில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720 மதிப்பெண்களுடன் 99.9999019 மதிப்பெண் விழுக்காடு (Percentile) பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல், ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த மாணவர் போரா வருண் சக்ரவர்த்தியும் 99.9999019 மதிப்பெண் விழுக்காடு பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.

அதேபோல், நீட் நுழைவுத்தேர்வில் முதல் 10 இடத்தில் 4 தமிழ்நாடு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து அகில இந்திய அளவில் டாப் இடம் பிடித்தவர்கள்:
- பிரபஞ்சன் ஜெ - ரேங்க் 1 (மதிப்பெண் 720 - 99.9999019 Percentile)
- கௌஸ்தவ் பௌரி - ரேங்க் 3 (மதிப்பெண் 716 - 99.9998528 Percentile)
- சூர்யா சித்தார்த் - ரேங்க் 6 (மதிப்பெண் 715 - 99.999068 Percentile)
- வருண் எஸ் - ரேங்க் 9 (மதிப்பெண் 715 - 99.999068 Percentile)

அதேபோல், ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் உத்தர பிரதேசத்தில் இருந்து அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications