இன்று நீட் தேர்வு.. மாணவ-மாணவிகளுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? கடும் சோதனைக்கு வாய்ப்பு
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 1.50 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இந்நிலையில் தான் நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்பு பயில விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. 2023ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டவற்றுக்கு இன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது.

இதற்காக நாடு முழுவதும் மொத்தம் 499 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில் 14 ஆயிரம் பேர் அரசு பள்ளியில் படித்தவர்களாவார்கள். இன்றைய நீட் தேர்வு என்பது தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெற உள்ளது. www.nta.ac.in இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் தான் நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளனர்.
அதன்படி மாணவ-மாணவிகள் மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின், கண்ணாடிகள், தாயத்து, பெல்ட் உள்ளிட்டவை அணிந்து செல்ல அனுமதியில்லை. முழுக்கை உடைகள் அணிய அனுமதியில்லை. மேலும் மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த ஆடைகளை அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயரம் குறைந்த ஹீல்ஸ் செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். ஷூ, அதிக உயரம் கொண்ட காலணிக்கு அணிந்து செல்ல அனுமதியில்லை. செல்போன் மற்றும் அனைத்து வகையிலான எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம்போல் இன்றும் மாணவ-மாணவிகள் கடும் சோதனைகளுக்கு பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும் மாணவ-மாணவிகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி, [email protected] இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம். அதோடு கூடுதல் விபரங்கள் ஏதேனும் பெற விரும்பினால் Click Here செய்தி அறிந்து கொள்ளலாம்.
-
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications