யார் தப்பு? பிடிஆர் vs விஜயபாஸ்கர்.. பரபரத்த அவை! குறுக்கே புகுந்த அப்பாவு! என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இடையே காரசார விவாதம் நடந்தது.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் ஆர். என் ரவி இந்த மசோதாவை திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா மீது இன்று அவையில் காரசார விவாதம் நடந்தது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது.

விஜயபாஸ்கர்
அவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் அளித்த பதிலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இருக்கிறார். இது சட்ட ரீதியான விஷயம். இதை நுணுக்கமாக ஆராய வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது. மாடர்ன் டென்டல் கல்லூரி vs மத்திய பிரதேச தீர்ப்பை சுட்டிக்காட்ட வேண்டும். அதில் நீட் என்பது செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாக நீதிபதிகள் கூறி உள்ளனர்.

சட்ட ரீதியான விஷயம்
எனவே இது சட்ட ரீதியான விஷயம். இதை மிகவும் கவனமாக, நுணுக்கமாக கவனமாக ஆராய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. நாங்கள் இதில் ஒரே உணர்வோடு இருக்கிறது. திராவிட கட்சிகள் ஒருமித்த குரலை இதில் எழுப்பி வருகின்றன. அதிமுக கட்சியான ஜெயலலிதா காலத்தில் இருந்தே நீட் எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. எனவே இதையும் சட்ட ரீதியாக ஆராய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்று விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உறுப்பினர் விஜயபாஸ்கர் ஒரு தீர்ப்பை சுட்டிக்காட்டி, அதை எடுத்துக்காட்டாக கூறி, நீட் விவகாரத்தை சட்ட ரீதியாக நுணுக்கமாக அணுக வேண்டும் என்று கூறுகிறார். துல்லியமாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து இதை அணுக வேண்டும் என்று கூறுகிறார். நான் கேட்க வேண்டியது 2019ல் அவர்கள் கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவில் அவர்கள் ஆராய்ச்சி செய்யவில்லையா?

நீங்கள் ஆராய்ச்சி செய்யவில்லையா?
அவர்கள் சட்டத்தை ஆராயாமல்தானா பில் கொண்டு வந்தனர்? அவர்கள் ஒரு மசோதா கொண்டு வந்தார்களே அதில் சட்டத்தை ஆராய்ந்து இருப்பார்கள் தானே.. அப்படித்தானே நாமும் சட்டத்தை ஆராய்ந்து பில் கொண்டு வந்து இருக்கிறோம்.. என்று பிடிஆர் குறிப்பிட்டார். இதனால் அவையில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதையடுத்து குறுக்கே புகுந்த சபாநாயகர் அப்பாவு.. எதிர்க்கட்சி உறுப்பினர் விஜயபாஸ்கர் நல்ல ஆலோசனை தானே சொல்லி இருக்கிறார்.

நல்ல ஆலோசனை
அவர்கள் நலன் ஆலோசனை சொன்னால் அதை ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லையே.. நல்ல ஆலோசனைதான்தான் சொல்றாங்க.. அதற்கு இந்த பதிலே தேவை இல்லை, என்று பிடிஆருக்கு பதில் அளிக்கும் வகையில் அப்பாவு மடைமாற்றி பேசினார். இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். அதற்கு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும் என்று கூறுகிறோம்.

யார் தப்பு?
நாங்கள் ஆக்கபூர்வமான ஆலோசனை மட்டும்தானே சொல்கிறோம். நீங்கள் கொண்டு வந்த மசோதாவையும் இப்போது திருப்பி அனுப்பி உள்ளார்களே. இது யார் தப்பு என்று சொல்வீர்கள்? இது உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்டது என்று குறிப்பிட்டார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, அதுதான் நானே அமைச்சர் (பிடிஆர்) சொன்ன பதில் தவறு என்று கூறி விட்டேனே, நன்றி சொல்லி முடியுங்கள், என்று எடப்பாடி பழனிசாமியை ஆஃப் செய்தார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications