ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்.. திமுகவுக்கு எதிராக முக்கிய முடிவை எடுக்கும் பாஜக?.. இனிதான் சிக்கலே
: நீட் தேர்வு தீர்மானத்தை மீண்டும் திருப்பி அனுப்ப ராஜ்பவன் முயல்வதாக கூறப்படுகிறது
சென்னை: சமீபகாலமாக மத்திய அரசுடன் இணக்கமான போக்கை திமுக கையாண்டாலும், அது குலைந்து போகும் வகையில் சில சிக்கல்கள் வந்துவிடும்போல தெரிகிறது.. எனினும், முக ஸ்டாலினின் திமுக அரசு, எப்படி எதிர்கொண்டு தமிழக நலனை காக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அதை அனுப்பி வைத்தது.
தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 142 நாட்கள் கடந்த நிலையில், சமீபத்தில் தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை ஆளுநர் ஆர்என் ரவி நிராகரித்தார்...

ஆர்என் ரவி
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழக கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா தீர்மானங்களை, அனைத்து கட்சி ஆதரவுடன் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறது திமுக அரசு.. இதன்பேரில் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார்? நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? தமிழக ஏழை மருத்துவ மாணவர்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதிகாரங்கள்
பொதுவாக, ஒரு மாநில ஆட்சியானது, ஆளுநரின் பெயரிலேயே நடைபெறுகிறது இயல்பு... மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி எல்லாவிதமான ஆட்சி அதிகாரங்களையும் ஆளுநர் செயல்படுத்துவார்... ஆனாலும், மத்திய அரசின் பிரதிநிதியாகவே ஆளுநர் என்பவர் செயல்படுகிறார் என்ற பொதுப்படையான பிம்பம் இருக்கவே செய்கிறது.. அது நம் தமிழ்நாட்டிலும் அப்போதிருந்தே இருக்கவே செய்கிறது.. அரசின் சட்ட மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பும்போது பெரும்பாலும் காரணங்கள் சொல்லப்படுவதில்லை...

தமிழிசை விளக்கம்
அப்படியே காரணங்கள் சொல்வதாக இருந்தாலும், சட்டரீதியிலான காரணங்கள் மட்டுமே சொல்லப்பட்டது... கவர்னரின் தனிப்பட்ட பார்வை, அவருக்கு கிடைத்த தகவல்கள் அல்லது தரவுகள் ஆகியவற்றை காரணங்களாக சொல்லப்பட்டதில்லை... அப்படி சொல்லவும் அதிகாரம் இல்லை. சில தினங்களுக்கு முன்பு தமிழிசை சவுந்தராஜன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், ஒரு மாநில அரசு தீர்மானங்கள் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், அந்த கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பலாமா என்பது குறித்து விளக்கமாக சொல்லியிருந்தார்..

ஆளுநரின் உரிமை
அப்படியே காரணங்கள் சொல்வதாக இருந்தாலும், சட்டரீதியிலான காரணங்கள் மட்டுமே சொல்லப்பட்டது... கவர்னரின் தனிப்பட்ட கருத்து மற்றும் பார்வை, அவருக்கு கிடைத்த தகவல்கள் அல்லது ஆதாரங்கள் ஆகியவற்றை காரணங்களாக சொல்லப்பட்டதில்லை... அப்படி சொல்லவும் அதிகாரம் கிடையாது.. சில தினங்களுக்கு முன்பு தமிழிசை சவுந்தராஜன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், ஒரு மாநில அரசு தீர்மானங்கள் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தால, அந்த கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பலாமா என்பது குறித்து விளக்கமாகவே சொல்லியிருந்தார்..

ராஜ்பவன்
அந்த வகையில், தீர்மானங்களை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு உரிமை உள்ளது என்றாலும், இப்போது இன்னொரு தகவல் அரசியல் வட்டாரத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறது திமுக அரசு இல்லையா? அதற்கும் எந்தவிதமான அசைவும் ராஜ்பவனில் காணப்படவில்லையாம்.. கவர்னருக்கே இருக்கும் அதிகாரத்தின்படி முடிவெடுக்காமல் அதை கிடப்பில் போட்டு வைத்துள்ளனராம்..

திமுகவுக்கு சிக்கல்?
ஆனால், நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பியனுப்பியதில் சொந்த கருத்துக்களையும் கவர்னர் சொல்லியிருப்பதாக தெரிகிறது. இதையும் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பக்கூடும் என தெரிகிறது.. இன்னொரு விஷயமும் கசிந்து வருகிறது.. நீட்விலக்கு மசோதாவை மட்டுமல்ல, இனி ஒன்றிய அரசோடு முரண்படும் எந்த சட்ட மசோதாவுக்கும் அனுமதிப்பதில்லை என்றும், அதை திருப்பி அனுப்புவதும் என்றும் ராஜ்பவன் தீர்மானித்திருப்பதாக வட்டாரங்கள் சொல்கின்றன... மேலும், அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்யப்பட்ட சிறைவாசிகள் தொடர்பான கோப்பினையும் திருப்பி அனுப்ப கவர்னர் ஆலோசிப்பதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகின்றன..

தமிழகத்தின் நலன்
ஏற்கனவே நீட் உட்பட தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய எத்தனையோ நிலுவைகளை மத்திய அரசு தராமல் இழுத்தத்து வருகிறது.. இதனால் மத்திய அரசை பகைத்து கொள்ள முடியாமல் திமுகவுக்கு ஏற்கனவே தர்மசங்கடான நிலைமை உள்ளது.. இப்போது மத்திய அரசை பகைத்து கொள்ளும் எல்லா கோப்புகளையும் திருப்பி அனுப்பிவிட்டால், அது திமுக அரசுக்கு மேலும் சிக்கலையே ஏற்படுத்தக்கூடும்.. எனினும், இதையெல்லாம் முறியடித்து மக்களின் எதிர்பார்ப்பை விடியல் அரசு எப்படி பூர்த்தி செய்ய போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு..!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications