நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. டவுன்லோடு செய்வது எப்படி?
சென்னை: வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. www.exams.nta.ac.in -என்ற இணையதளத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது. இந்த நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர முடியும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

நீட் தேர்வுக்கு தமிழக அரசு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், தேர்வுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளை தயார்ப்படுத்துவதற்கு ஏதுவாக இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு நீட் தேர்வை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் 10,832 பேர் எழுத இருக்கிறார்கள். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 128 மையங்களில் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் தான், நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
www.exams.nta.ac.in -என்ற இணையதளத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் https://neet.ntaonline.in/frontend/web/admitcard/index என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
அதன்பிறகு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு எழுத இருக்கும் மையம், விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் உள்ளிட்டவை அதில் இடம் பெற்று இருக்கும்.
நாடு முழுவதும் 571 நகரங்களிலும் இந்தியாவிற்கு வெளியே 14 நகரங்களிலும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலம், இந்தி, அசாமிஸ், பெங்காலி, ஒடியா, கன்னடா, பஞ்சாபி, உருது, மலையாளம், மராத்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வு எழுத 23,81,833- பேர் இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications