இத்தனை செயற்கையா? உதட்டை கூட விட்டு வைக்கலையா? பிரபலம் கேட்ட அந்த கேள்வி.. ஆடிப் போனா நீயா நானா கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் செப்டம்பர் 10ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் இந்த வாரம் பியூட்டி கிளினிக்கை ஆதரிப்பவர்கள் அதை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பலர் தாங்கள் தங்களுக்கு பிடித்த மாதிரி தங்களுடைய உடல் அமைப்பை பியூட்டி கிளினிக் மூலமாக மாற்றம் செய்வது குறித்து பேசி இருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி கிட்டத்தட்ட 10 வருடங்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒளிபரப்பாகி வருகிறது.
பொதுவாக நீயா நானா நிகழ்ச்சியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் சமுதாயத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதம் நடைபெறும். அந்த வகையில் இந்த வாரம் பியூட்டி கிளினிக் ஆதரிப்பவர்கள் மற்றும் விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் பியூட்டி கிளினிக் என்பது பெரிய பணக்காரர்கள் மட்டும்தான் அதை நாடிக் கொண்டிருந்தனர்.
சினிமா பிரபலங்கள் பலரும் பியூட்டி கிளினிக் மூலமாக தங்களுடைய உடல் அமைப்பு தங்களுக்கு பிடித்த மாதிரி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது நடுத்தர வர்க்கத்தினரும் பியூட்டி கிளீனிக்கை நாட தொடங்கிவிட்டனர். காரணம் தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் அனைத்து தரப்பட்டவர்களும் ஆர்வம் கட்டி வருவது தான். அதற்கு அதிகப்படியான பணம் செலவு ஆவதாக இருந்தாலும் இதுவும் இன்று அடிப்படை செலவாக பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் பலருக்கு 20 வயதிற்குள்ளேயே முடி கொட்ட தொடங்கி விடுகிறது. அல்லது முடி நரைக்க தொடங்கி விடுகிறது. இதற்காக பல இளைஞர்களும் இளம் பெண்களும் கூட பியூட்டி கிளினிக் நாட தொடங்கி விட்டனர். அதேபோல கல்லூரி படிப்பை முடித்ததும் பலருக்கும் ஐடி வேலை சர்வ சாதாரணம் ஆகி விடுகிறது.
அதில் யாருக்கும் நாம் சலித்தவர் அல்ல என்று காட்டிக் கொள்வதற்காக நம்முடைய அழகை நாமே மெருகேற்றிக் கொள்ளும் விதமாக பியூட்டி கிளீனிக்கில் புதுப்புது விஷயங்கள் வந்து கொண்டே இருக்க அதை முயற்சி செய்து கொண்டிருப்பவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் பியூட்டி கிளினிக் பற்றிய டாபிக் தொடங்கப்பட்டதும் அதில் சிகிச்சை எடுத்தவர்கள் தங்களுடைய அனுபவங்களை ஷேர் செய்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் அதை விமர்சிப்பவர்கள் பியூட்டி கிளினிக் போனால் முதலில் காது சரியில்லை என்று சொல்வார்கள் பிறகு உதடு பெரியதாக வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி அடுக்கிக் கொண்டே போவார்கள் என்று ஒரு பெண் கூறிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு பியூட்டி கிளீனிக்கை ஆதரிப்பவர்களில் இருக்கும் ஒரு பெண் அங்கே யாரையும் நீங்கள் இதை செய்து ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது இல்லை. அவர்கள் ஒபினியன் சொல்கிறார்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் செய்யலாம் இல்லை என்றால் வேண்டாம் என்று வந்துவிடலாம் என்று கரராக பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக பிரமோ வெளியாகி இருக்கும் நிலையில் இது குறித்து அதிகமான கருத்துக்களும் குவிந்து வருகிறது.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications