சுபாஷினியே எதிர்பார்க்கல.. கவின் கழுத்தில் வெட்டு! சுர்ஜித்தின் 15 ரீல்ஸ்! கிராம மனநிலையில் நெல்லை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கவினுக்கும் எனக்கு என்ன உறவென்று யாருக்கும் தெரியாது.. என்னுடைய பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்க நினைப்பது தவறு, யாரும் இஷ்டத்துக்கும் வதந்தியை பரப்ப வேண்டாம், உங்களுக்கு தோன்றுவதையெல்லாம் பேசாதீங்க.. என்னுடைய அப்பா , அம்மாவுக்கு இதில் எந்த சம்பந்தமும் கிடையாது, அவர்களுக்கு தெரியாது. இதை இத்துடன் விட்டுருங்க, விட்டுருங்க..." என்று கவினின் காதலி சுபாஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இந்த வீடியோ குறித்து, எழுத்தாளர் ராஜகம்பீரன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

Media Circle என்ற சேனலுக்கு எழுத்தாளர் ராஜகம்பீரன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "சுபாஷினீயின் பெற்றோர் இருவருமே காவல்துறையில் பணியில் உள்ளனர்.. இடைநிலை சாதியாகவும், மறவர் சமூகமாகவும், ஆதிக்க சாதியாக இருக்கிறோம் என்ற தைரியம் இல்லாமல், பட்டப்பகலில் ஒருவரை பகிரங்கமாக வெட்ட முடியும்?

Subhashini Kavin Nellai

பயிற்சி பெற்ற கொலைகாரன்

ஒரு கூலிப்படையினர் கொன்றிருந்தால்கூட, பயிற்சி பெற்ற கொலைகாரன், இப்படி கொடூரமாக வெட்டிவிட்டதாக சொல்லலாம்.. ஆனால் படித்த நபர் எப்படி?

அரசு உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் மகனை எப்படி பாதுகாப்பார்கள் என்பது பலருக்கும் தெரியும். அந்தவகையில், எதிர்பாராத எமோஷனல் மர்டர் போல இது தெரியவில்லை.. இது திட்டமிட்ட கொலைதான்..

வேறு எங்கியோ வைத்தியம் பார்த்து கொண்டிருந்த கவினின் தாத்தாவை, தன்னுடைய மருத்துவமனைக்கு சுபாஷினி சிகிச்சைக்கு வரவழைத்துள்ளார்.. அதே மருத்துவமனைக்கு அதே நேரத்துக்கு சுர்ஜித் எப்படி வந்தார்? உன்கூட தனியாக பேச வேண்டும் என்று தனியாக அழைத்து சென்று, நம்பவைத்துதான் கவினை வெட்டியிருக்கிறார் சுர்ஜித்.

சுபாஷினியே எதிர்பார்க்கல

அப்படியானால், கவினை பேசுவதற்கு அழைத்து செல்வதற்கு முன்பேயே கொலை செய்வதற்கான ஆயுதங்களுடன்தான் சுர்ஜித் தயாராக வந்துள்ளார்.. எனவே, இது திட்டமிடாத கொலை என்று சொல்ல முடியாது..

ஆனால், கவினை கொலை செய்ய போவதாக, சுபாஷினியிடம் சுர்ஜித் முன்கூட்டியே சொல்லியிருக்க வாய்ப்பில்லை.. இது மாதிரியான ஒரு கொடூரமான சாதி ஆவண படுகொலை விஷயத்தை, சுபாஷினியிடம் சொல்லியிருக்க மாட்டார்கள்.. கவினிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து செல்கிறோம் என்று வேண்டுமானால் சுர்ஜித் சொல்லியிருக்கலாம்.. இப்படி கொலை வரை போகும் என்பதை சுபாஷினியே எதிர்பார்த்திருக்க மாட்டார்..

சுபாஷினி வீடியோ

சுபாஷினி பேசி வெளியிட்டுள்ள விளக்க வீடியோவில் கவினின் அம்மாவிடம் கடைசியாக பேசியதாக சொல்கிறார்.. இதற்கான ஆடியோ பதிவும் செல்போனில் உள்ளது..

சுபாஷினியை பொறுத்தவரை, தன்னுடைய சகோதரர் கொலைகாரராகிவிட்டார்... அப்பாவும் கைதாகி உள்ளார்.. அம்மா தலைமறைவாக உள்ளார்.. ஒட்டுமொத்த குடும்பமே சீரழிந்து நிற்கிறது.. இந்த 4 நாட்களாகவே கவினின் உடலும் வாங்கப்படாமல் உள்ளது.. எனவே, சுபாஷினி நிலைகுலைந்து நிற்கிறார்..

ஸ்டேட்டஸில் உயர்ந்த கவின்

சாப்ட்வேர் என்ஜினியரான கவின், என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார்.. சென்னையில் முன்னணி தனியார் நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய் சம்பளம் பெறக்கூடிய நிலையில் இருந்துள்ளார்.. கவினின் பூர்வீக சொத்து, கிட்டத்தட்ட 10 கோடி இருக்கும் என்கிறார்கள்.. எனவே, சாதாரண ஸ்டேட்டஸில் ஒன்றும் கவின் இல்லை..

அதாவது படிப்பு, கல்வி, உத்தியோகம், பொருளாதாரம் எல்லாமே கவினுக்கு இருந்தும், சாதி என்கிற விஷயத்துக்கு மட்டும் தகுதி இல்லை என்று நினைத்துவிட்டார்கள்.. நடைமுறையில் சாதி என்ற ஒன்று கிடையாது.. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று சாதி..

ஏற்கனவே சுபாஷினியின் அப்பா மூலம், பாளையங்கோட்டை எஸ்.ஐ. வைத்து, கவினுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. எனினும் கவின் தைரியத்துடன் எதிர்கொண்டு வந்துள்ளார்.. இந்த தைரியம்தான் அவரை காவு வாங்கிவிட்டது.. உடம்பில் வேறு எங்குமே இல்லாமல், கழுத்தில் மட்டுமே கவின் வெட்டப்பட்டுள்ளார்.

கிராம மனநிலைமையில் மக்கள்

திருநெல்வேலியில் பலரும், கிராம மனநிலையில் இருந்து இன்னமும் வெளிவரவில்லை என்றே தெரிகிறது.. அதேபோல ஆதிக்க சாதிக்காரர்கள் காவல்துறையில் உயரதிகாரிகளாக உள்ளனர்.. காவல்துறையில் நிரப்பப்படும் பெரும்பாலான போஸ்டிங்குகள், முழுக்க முழுக்க குறிப்பிட்ட சாதியினராக இருப்பதாக, ஒரு ஆய்வறிக்கையே சொல்கிறது..

சுர்ஜித் தன்னுடைய இன்ஸ்டாவில், ஜாதியை ஊக்குவிக்கும்படியான பாடல்களுக்கு அரிவாளுடன் மட்டுமே 15 ரீல்ஸ் போட்டிருக்கிறார்.. இதெல்லாம் பெற்றோருக்கு தெரியாமல் இருக்காது.. "இது நம்முடைய சாதிக்கு பெருமை, நாம் வீரப்பரம்பரை" என்று சொல்லி சொல்லியே ஊட்டி வளர்த்திருப்பார்கள்.. எனவே, பெற்றோரின் திட்டம் இல்லாமல் இந்த கொலை நடந்திருக்காது.. அதனால்தான் சுபாஷினியின் தாயையும் கைது செய்ய சொல்கிறார்கள்..

வாழ வேண்டிய இளைஞர்கள்

மகனை கொலைகாரனாக பார்த்தாலும், எப்படியாவது அந்த வழக்கை எதிர்கொள்வோம் என்ற தைரியத்தை மகனுக்கு பெற்றோர் ஊட்டியிருப்பார்களோ? என்ற சந்தேகமும் வலுக்கிறது..

ஆனால், இன்று வாழ வேண்டிய வயதில் சுர்ஜித் சிறை சென்றுள்ளார்.. இன்னொரு இளைஞன் கவின் பிணமாகிவிட்டார்.. அந்தவகையில் 2 குடும்பத்தின் நிம்மதியுமே இன்று போய்விட்டது. அப்படியானால், சாதி என்பது கொடூரமான விஷத்தைவிட மோசமானதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+