"டபுள் கேம்" ஆடுது திமுக.. கோ-பேக் மோடி சொன்னவர்கள் கம்பேக் மோடி என அழைப்பதா? எஸ்டிபிஐ முபாரக் சாடல்
சென்னை: மோடி எதிர்ப்பில் திமுக இரட்டை நிலைபாட்டை கடைபிடித்து வருவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றம்சாட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, “கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துவக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவை கடந்து, அது முழுக்க முழுக்க பிரதமர் மோடிக்கு திமுக அரசு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியாகவே இருந்தது. கோ பேக் மோடியை ட்ரெண்டாக்கியவர்கள் இன்றைக்கு கம்பேக் மோடி, வெல்கம் மோடி என புகழாரம் சூட்டத் தொடங்கி விட்டார்கள்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்னர் வேறு நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாட்டை திமுக பின்பற்றத் தொடங்கியுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை அழைக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் எங்கு ஏற்பட்டது? கடந்த ஆண்டு பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டி அம்மாநில முதல்வரால் மட்டுமே தொடங்கி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது.
இப்படி இருக்கும் சூழலில், பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பதாக சொல்லும் திமுக அரசு வலியச் சென்று பிரதமருக்கு அழைப்பு விடுத்து மிக பிரம்மாண்டமான வரவேற்பை கொடுத்து உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை கூட பரிசீலிக்காமல் எந்த அடிப்படையில் இத்தகைய பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை.
பாஜக அரசின் திட்டங்களுக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை என்பதனை காட்டுவதற்காகவா அல்லது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரை முன்னிலைப்படுத்தவா என்கிற கேள்வி எழுகிறது. எவ்வாறாயினும் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.” என்று அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதிமுகவுடன் எஸ்டிபிஐ கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் பிரதமர் மோடியை வரவேற்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசையும் திமுகவையும் கண்டித்து அக்கட்சித் தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications