ரூ2 கோடி போச்சு! ஹெலிகாப்டர் தரேன்னு சொன்னாங்க.. பிஞ்ச செருப்போடு நிக்குறேன்! நியோமேக்ஸ்: பெண் வேதனை
சென்னை: ஹெலிகாப்டர் தரேன்னு சொல்லி பணம் வாங்கினார்கள். இப்போ பிஞ்ச
செருப்போடு நிக்குறேன். 2.25 கோடி ரூபாய் அதில் போட்டேன். இப்போது என்
வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுவிட்டது. ரொம்ப கஷ்டப்படுகிறேன். நியோமேக்ஸ்
நிதி நிறுவனத்தில் 2.25 கோடி பணம் போட்டேன். 2 வருடம் ஆகியும் ஒருமுறை பணம்
வாங்கவில்லை. சாக்கு சொல்லி தட்டிக் கழிக்கிறாங்க என்று நியோமேக்சில்
பணத்தை இழந்த பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனமானது, தங்கள்
நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக தருவதாகவும்,
மாதத்திற்கு 12 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகவும் அறிவிப்புகளை
வெளியிட்டது. இதனை நம்பி பலரும் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய்
முதலீடு செய்தனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை,
கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை என, தமிழகம் முழுவதும் உள்ளவர்கள்
கோடிக்கணக்கில் முதலீடுகளை செய்தனர். இந்த நிலையில் முறையாக பணத்தை
திருப்பி தரவில்லை என முதலீட்டாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
போர்க்கொடி தூக்கினர். காவல் நிலையங்களில் புகாரளித்தனர். ரூ.5 ஆயிரம் கோடி
வரை நியோமேக்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
’நியோமேக்ஸ்’ நிறுவனங்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய
அசையும், அசையா சொத்துகளை போலீசார் கையகப்படுத்தினர். கையகபடுத்தப்பட்ட
சொத்துகளை விற்று, பாதிக்கப்பட்டோருக்கு பகிர்ந்து அளிக்கவும் அரசிடம்
காவல்துறை அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. சொத்துக்களை விற்று அதன்மூலம்
கிடைக்கும் பணத்தை பாதிக்கப்பட்டோருக்கு உரிய வழிகாட்டுதலின்படி வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் கடந்த ஆண்டு கூறப்பட்டது.
இந்த நிலையில்தான், ஹெலிகாப்டர் தரேன்னு சொல்லி பணம் வாங்கினார்கள். 2.25
கோடி ரூபாய் அதில் போட்டேன். இப்போது என் வாழ்வாதாரமே
பாதிக்கப்பட்டுவிட்டது. ரொம்ப கஷ்டப்படுகிறேன் என்று சிவதர்ஷினி என்ற பெண்
ஒருவர் தன் கஷ்டத்தை கூறியுள்ளார். இப்போது எனக்கு ஹெலிகாப்டர் கூட
தேவையில்லை. காலில் உள்ள செருப்பு தேய்ந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
அந்த பெண் கூறியதாவது:-
என் பெயர் சிவதர்ஷினி. நான் போட்டுருக்கின்ற அமவுண்ட் 2.25 கோடி ரூபாய். 2
வருஷம் ஆகிட்டு. ஆனால் ஒரு முறை கூட மெச்சூரிட்டி வாங்கவில்லை. 30
லட்சத்துக்கு மாத பணம் கூட வாங்கவில்லை. ரொம்ப
சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறேன். இஎம் ஐ, கோல்டு லோன், ஹோம் லோன்,
மியூச்சுவல் பண்ட் லோன் என எல்லாம் போட்டு இதில் இன்வெஸ் பண்ணினேன்.
ஹெலிகாப்டர் எல்லாம் தரேன்னு சொன்னாங்க. இப்போ எனக்கு ஹெலிகாப்டர் எல்லாம் தரவேண்டாம்.
என் காலில் பிய்ந்து போன செருப்பை போட்டுக்கொண்டு இருக்கிறேன். ரொம்ப
கஷ்டப்படுகிறேன். வாழ்வாதாரமே ரொம்ப சிரமமாக இருக்கு. ஏனென்றால் மாதம்
மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வட்டியோடு இஎம்ஐ கட்ட வேண்டியிருக்கிறது.
புரூப் வேண்டும் என்றால் கூட காட்டுகின்றேன். யு டபிள்யூவில் பண்ணிக்கொண்டு
இருக்கிறாங்க. ஆட்கள் கூட கூட தாமதம் ஆகிக்கொண்டு இருக்கிறது. நீங்கள் தான்
புகார் கொடுத்துவிட்டீர்கள் தானே, அங்கே போய் வாங்கிக்கோங்க என்று சொல்கிறார்கள்.
நானும் எல்லா இடத்திலயும் கேட்டு கேட்டு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
நொண்டி குதிரைக்கு சறுக்குனது சாக்கு என்று சொல்லி தட்டி கழித்துக்கொண்டு
இருக்கிறார்கள். மனசு வைத்தால் பண்ணலாம். ஆயிரம் பேருக்கு கொடுக்கிறதற்கே
அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது என்றால், 25 ஆயிரம் பேருக்கு என்பதை ஈசியாக
எடுத்துக்கொள்கிறார்கள். எங்கெல்லாம் சட்டத்தில் ஓட்டை இருக்கிறதோ
அதையெல்லாம் சொல்கிறார்கள். ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications