நேபாள பேரழிவில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து சிக்கியது எத்தனை பேர்

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 650க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 2,000க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவானது என்றே தெரியவில்லை. தொடர்ந்து 5-வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேரழிவில் இந்தியர்கள் பலரும் சிக்கியுள்ள நிலையில், அதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதேகோஷி ஆற்றுப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தியது. வீடுகள், பாலங்கள், சாலைகள், எல்லைச் சோதனைச் சாவடிகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கிட்டத்தட்ட பல கிமீ தொலைவுக்கு பேரழிவு ஏற்பட்டதால், தகவல் தொடர்பு வசதி மொத்தமாக முடங்கியது.

Nepal nepal flood Nepal flood reason

நேபாள வெள்ளம்

இதனால் அங்கு சிக்கியுள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன. நேபாளத்திற்கு இந்தியர்கள் பலரும் ஆன்மீக யாத்திரைக்கு சென்ற நேரத்தில் இந்த பேரழிவு தாக்கியுள்ளது. இதனால் அங்கு இந்தியர்கள் பலரும் மாயமாகியுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ளவும் தீவிரமாக முயற்சி நடந்து வருகிறது. மாநிலம் வாரியாக எத்தனை பேர் நேபாளத்தில் சிக்கியுள்ளனர் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு குழுக்களாக நேபாளத்துக்கு சென்ற 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் மீதமுள்ள 100 பேரின் நிலை இன்னும் தெளிவாகவில்லை. இதை அமைச்சர் ராஜ்மோகன் உறுதி செய்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 6 பேர் வெள்ளத்தில் இருந்து உயிர் தப்பி பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். உயிர் தப்பிய உரையூரை சேர்ந்த சிவரஞ்சனி, தான் கடவுளின் அருளால் உயிர் பிழைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், மயிலாடுதுறையை சேர்ந்த ஒரு பெண் தனது சேலையை பயன்படுத்தி, தான் எஸ்கேப் ஆனதாக தெரிவித்துள்ளார்.

திபெத்தில் இருந்து வெள்ளத்தில் உயிர் தப்பிய 39 தமிழர்கள் விரைவில் தமிழகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே தஞ்சாவூரை சேர்ந்த பேராசிரியர் தங்கமதி, கும்பகோணத்தை சேர்ந்தவர்களுடன் நேபாளத்துக்கு சென்றிருந்த நிலையில், அவரை பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை. மேலும், சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் டிராவல் நிறுவனம் மூலம் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற 49 பேரின் நிலையும் தெரியவில்லை.

கர்நாடகா: 14 பேர் மாயம்

கர்நாடகாவை சேர்ந்த 33 பேர் நேபாளத்தில் இருந்ததாக முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதில் 19 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் இன்னும் தொடர்பில் இல்லை. கண்டுபிடிக்கப்பட்டவர்களில் இருவர் ஏற்கனவே கர்நாடகா திரும்பவிட்டனர். மீதமுள்ளவர்கள் இந்தியா வந்ததும் நேரடியாக பெங்களூருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா: 67 பேர்

மகாராஷ்டிராவை சேர்ந்த 69 பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெள்ளத்தினால் சீன பகுதிக்குள் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் இப்போது சீனாவில் இருந்து நேபாளத்துக்குள் பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். அவர்கள் திங்கள்கிழமை மும்பை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அவசர மையத்தில் 404 பேர் தங்கள் விவரங்களை பதிவு செய்திருந்தனர். இவர்களில் சுமார் 150 பேர் ஏற்கனவே திரும்பிய நிலையில், 262 பேர் நேபாளம் அல்லது சீனாவில் சிக்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோக 67 மகாராஷ்டிரா பக்தர்கள் காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவர்கள் டிமுரே பகுதியில் யாத்திரைக்காக காத்திருந்தபோது வெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அனுகுல் பொத்தார் மற்றும் அவரது மனைவி ரேபா பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். வெள்ளம் வருவதாக தகவல் கிடைத்ததும் அவர்களது ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை பாதுகாப்பான பகுதிக்கு ஓட்டி சென்றதால் இருவரும் உயிர் தப்பினர். அதே நேரத்தில், முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சுப்ராங்க்ஷு ராயின் மனைவி சர்மிஷ்தா பௌமிக் ராய் உள்ளிட்ட சிலரை பற்றிய தகவல் இன்னும் கிடைக்கவில்லை. 30 பேர் கொண்ட கைலாஷ்-மனசரோவர் யாத்திரை குழுவுடன் சென்ற அவர், வெள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு சுமார் 10 கிமீ தொலைவில் இருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+