விக்ரம் 2 பர்ஸ்ட் லுக் கெட்டப்பில் மீண்டும் களத்தில் குதித்தார் நேசமணி.. இணையதளங்களில் சலசலப்பு!
சென்னை: பிரெண்ட்ஸ் படத்தின் நேசமணி கேரக்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புகழ்பெற்றது. அது போல் மீண்டும் களத்தில் குதித்துள்ளார் "நேசமணி".
பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி, ரமேஷ் கண்ணாவின் கேரக்டர் பெயர் கிருஷ்ணமூர்த்தி, சார்லியின் பெயர் கோவாலு. இவர்கள் பெயின்ட் அடிக்கும் தொழிலாளர்கள் போலும் வடிவேல் ஒப்பந்ததாரராகவும் நடித்திருந்தார்.
இந்த படத்தின் காமெடி காட்சிகள் அருமையாக இருக்கும். இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிப்புக்கு கேரண்டி. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு என்ஜினியரிங் லேர்னர்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் சுத்தியலின் படத்தை போட்டு இதற்கு உங்கள் ஊரில் என்ன பெயர் என ஒருவர் துபாயில் உள்ளவரிடம் கேட்டுள்ளார்.

மண்டை
அதற்கு அவரோ இதன் பெயர் சுத்தியல். இதுதான் பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் விழுந்து டங் டங் என சத்தம் கேட்டு அவரது மண்டை உடைந்தது என வடிவேல் காமெடியை கூறியுள்ளார். இதையடுத்து அந்த நண்பரும் நேசமணி இப்போது எப்படி உள்ளார் என கேள்வி கேட்க அதற்கு விக்னேஷ் Pray for Neasamani என கூறியதன் மூலம் உருவான ஹேஷ்டேக் பிரபலமானது.

நேசமணி ஹேஷ்டேக்
இதையடுத்து #Pray_for_Nesamani என்ற ஹேஷ்டேக் டிரென்டானது. தற்போது இதே நேசமணி மீண்டும் டிரென்டாகி வருகிறார். ஆம், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விக்ரம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் விஜய் சேதுபதி, கமல்ஹாசன், பஹத் பாசில் ஆகியோரின் முகங்கள் மட்டும் கடுங்கோபமாக இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

கமல்
இடது பக்கம் விஜய் சேதுபதி, நடுவில் கமல், வலது பக்கத்தில் பாசில் ஆகியோரின் போஸ்டர் டிரென்டானது. முகத்தில் ரத்த கீறல்களுடன் உள்ள இந்த புகைப்படம் பார்ப்பதற்கு ஆக்ஷன் மூவி போல் உள்ளது. இந்த நிலையில் தற்போது நேசமணியும் இதே லுக்கில் டிரென்டாகி வருகிறார்.

பிரென்ட்ஸ் படம்
சிரிப்பே துணை என்ற டிவிட்டர் பக்கத்தின் அட்மின் பிரென்ட்ஸ் படத்தில் வந்த 3 முக்கிய கேரக்டர்களை விக்ரம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போல் டிசைன் செய்துள்ளார். இதில் இடதுப்புறம் ரமேஷ் கண்ணாவின் படம், நடுவில் வடிவேலு, வலது பக்கத்தில் சார்லியின் படம் போடப்பட்டுள்ளது. ஒரிஜினல் படத்தை போல் இவர்கள் முகத்திலும் கீறல்கள் உள்ளன.

கடுங்கோபம்
கமல்ஹாசனை போல் வடிவேலுவும் கடுங்கோபத்தில் இருப்பது போல் இந்த வலைதள போஸ்டரும் உள்ளது. இதில் சிரிப்பே துணை பிரென்ட்ஸ், வைகைப்புயல் வடிவேல் நேசமணி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டிவீட் தற்போது வைரலாகி வருகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications