“யாரிடம் சென்று கையேந்தி நிற்பது?” நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தை காட்டமாக விமர்சித்த இயக்குநர் வசந்தபாலன்
சென்னை: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம், இந்த ஆண்டில் வாங்கிய தமிழ் படங்களின் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அதில் முன்னணி நடிகர்களின் படங்களே இருந்தன. இயக்குநர் வசந்தபாலன் இதனை விமர்சித்து காட்டமாகப் பதிவிட்டுள்ளார். "படத்தை எடுத்து வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தின் வீதிகளில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வேண்டியிருக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார்.
வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்தபாலன். மனிதர்களின் மெல்லிய உணர்வுகளைப் படம் பிடிப்பதில் வல்லவரான வசந்த பாலன் கடைசியாக அநீதி படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில், நெக்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே வாங்குவதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ஃபேஸ்புக் தளத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் வசந்தபாலன். அதில், "சிறு தயாரிப்பாளர்களுக்கு, புதிய, மத்திம நாயகர்களுக்கு, புதிய அலை இயக்குநர்களுக்கும், திரையரங்குகளும் கிடைப்பதில்லை. ஓடிடி இணையங்களும் இல்லை. தொலைக்காட்சி சேனல்களும் இல்லை. படத்தை எடுத்து வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தின் வீதிகளில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வேண்டியிருக்கிறது.
ஓட ஓட சினிமாவை விட்டு விரட்டுகிறார்கள், முட்டி மோதி மண்டை உடைந்து தெருவில் கிடக்க வேண்டும். அது தான் அவர்களின் எதிர்பார்ப்பு. பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய கதாநாயகர்களுக்கு மட்டுமே எல்லா கதவுகளும் திறக்குமென்றால் இங்கே ஜனநாயகம் எங்கேயிருக்கிறது?
நல்ல திரைப்படம், அழகான கவித்துவமான கதை, நல்ல திரைக்கதை என்பதெல்லாம் பேச்சே இல்லை. பெரு நிறுவனப்படங்களை பெரிய நடிகர்களின் திரைப்படங்களை மட்டுமே வாங்குவோம் மற்றவர்கள் எல்லாம் வெளியேறுங்கள் என்கிறது நெட்ஃப்ளிக்ஸ் போன்ற இணையங்களும், தொலைக்காட்சி சேனல்களும், திரையரங்குகளும்.
சொந்த நாட்டிலேயே அகதியாக நிற்பது போன்ற ஒரு நிலை. நான்கு வருடங்களாக படம் இயக்க முடியாத நிலை. இயக்கினாலும் எங்கே விற்பது? யாரிடம் சென்று கையேந்தி நிற்பது? யார் வாங்குவார்கள்? எங்கு திரையரங்கு கிடைக்கும் என்றொரு பரிதாபமான நிலை எனக்கு மட்டுமில்லை. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் தொண்ணூறு சதவீதத்தினரின் நிலைமை இதுவே.
நெட்ஃப்ளிக்ஸ் எல்லா ஆண்டுகளும் புதிய படங்களை, சிறிய படங்களை, நல்ல இயக்குநர்களின் திரைப்படங்களைப் புறக்கணிக்கிறது. போன ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் வாங்கிய திரைப்படங்களின் தரங்களை நீங்களே இணையத்தில் தேடிப்பாருங்கள். ஒரு சிறு தயாரிப்பாளராக தேசிய விருது பெற்ற இயக்குநராக நெட்ஃப்ளிக்ஸுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications