டீ சர்ட் பர்பெர்ரி சரி! அப்படியே ராகுலின் ஷூ பிராண்டையும் ரேட்டையும்... பாஜகவை கலாய்த்த நெட்டிசன்கள்
சென்னை: ராகுல் காந்தியின் டீ சர்ட் பிராண்டு தெரிந்துவிட்டது, அப்படியே அவர் போட்டிருக்கும் ஷூ எந்த பிராண்ட் என்பதையும் சொல்லுமாறு பாஜகவுக்கு நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்க்கும் வகையிலும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அவரது நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில்தான் யாத்திரையின் 3ஆவது நாளான நேற்று முன் தினம் ராகுல் காந்தி அணிந்திருந்த டீ சர்ட் குறித்து பாஜகவினர் கிளப்பி விட்டனர்.

நாட்டின் ஒற்றுமை
நாட்டின் ஒற்றுமைக்காக நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி அணிந்து கொண்டிருப்பதோ வெளிநாட்டு நிறுவனமான பர்பெர்ரியின் டீ சர்ட். அதன் விலை ரூ 41,257 ஆகும். தேசமே இங்கே பாருங்கள் என பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்தது.

யாத்திரை
காங்கிரஸ் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் யாத்திரையில் கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து பயந்துவிட்டீர்களா. பணவீக்கம், வேலையின்மை போன்றவற்றை பற்றி பேசுங்கள். ஆடையை பற்றிதான் பேசுவோம் என நீங்கள் அடம்பிடித்தால் பிரதமர் மோடி அணிந்திரு்நத 10 லட்சம் மதிப்பிலான கோட் சூட் பற்றி பேசலாம் என பாஜகவுக்க பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி
மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் ஒரு பதிவில் ராகுல் காந்தி பரம்பரை பணக்காரர். அவர் இத்தனை ரூபாயில் உடை உடுத்துகிறார். ஆனால் டீ விற்றுக் கொண்டிருந்தவருக்க ஒன்றரை லட்சம் மதிப்பில் பேனா, கண்ணாடி எங்கே இருந்து வந்தது என கேள்வி எழுப்பியிருந்தார்.

ஷூ எந்த பிராண்டு
இந்த நிலையில் இன்னொரு நெட்டிசன் ஒருவர், அமித் மாலவியா அவர்களே ராகுல் காந்தி அணிந்திருக்கும் ஷூ மிகவும் அழகாக இருக்கிறது. அதை வாங்குவதற்கு நான் திட்டமிட்டுள்ளேன். உங்கள் ஐடி பிரிவினரிடம் கேட்டு அந்த ஷூக்கள் எந்த பிராண்டு, எத்தனை விலை என்பதை சொல்ல முடியுமா? ஷூக்களை கண்டுபிடிப்பதில் நீங்கள் வல்லவர்களாயிற்றே! என அந்த பதிவில் அந்த நபர் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications