தன்னுயிரை துச்சமாக்கி கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஹீரோக்கள்.. வைரலாகும் #Coronafighter!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை தற்காத்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பொது இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இணையதளத்தில் பாராட்டுகள் குவிகின்றன. அதுவும் #Coronafighters என்ற அடைமொழியுடன்!

Recommended Video

    கொரோனாவிற்கு எதிராக கம்பம் போலீசாரின் மிமிக்ரி மூலம் நூதன விழிப்புணர்வு - வீடியோ

    கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. சீனாவில் இதன் தாக்கம் குறைய தொடங்கினாலும் மற்ற நாடுகளில் அதன் தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துவிட்டது. இந்தநிலையில் உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கொண்டாட்டம்

    கொண்டாட்டம்

    இத்தாலியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 368 பேர் ஒரே நாளில் இறந்தனர். அது போல் ஈரானில் 129 பேரும் நேற்றைய தினம் இறந்தனர். இதனிடையே கொரோனாவிலிருந்து வடமேற்கு சீனாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவர்கள் முகமூடி அணிந்தவாறு பள்ளிகளுக்கு வந்தனர். கொரோனாவிற்கு எதிராக போராடும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், துப்புரவு ஊழியர்களை இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    மருந்து தெளித்தல்

    மருந்து தெளித்தல்

    பெரும்பாலான நாடுகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்ட போதிலும் போக்குவரத்து இயக்கம் குறைந்துள்ள போதிலும் அங்கு தினந்தோறும் அரசுப் பணியாளர்கள் சென்று கிருமிநாசினி மருந்துகளை தெளித்தல், பேருந்து, ரயில், விமானங்களை அவ்வப்போது துடைத்தல், பள்ளி, கல்லூரிகளிலும் மருந்து தெளித்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பணிவிடை

    பணிவிடை

    அது மட்டுமல்லாமல் பெரும்பாலான சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டதால் அங்கிருக்கும் இருக்கைகள், கைப்பிடிகள், டாய்லெட்டுகள் ஆகியவை சுத்தமாக துடைத்து கொரோனாவை எதிர்த்து வருகின்றனர். அது போல் மருத்துவமனையிலும் கொரோனா பாதித்தவர்கள், அறிகுறி உள்ளவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டு அவர்களுக்கு பணிவிடை செய்யப்படுகிறது.

    டிரென்டிங்

    டிரென்டிங்

    இந்த சுயநலமில்லாத சேவையை பாராட்டி இவர்களை #Coronafighters என்ற ஹேஷ்டேக் மூலம் டிரென்டாக்கினர்.

    77,776-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். அச்சத்தை முறியடித்த நம்பிக்கை. நல்ல செய்திகளையும் நேர்மறை எண்ணங்களையும் பகிருவோம் என்கிறார் இந்த நெட்டிசன்.

    வணக்கம்

    வணக்கம்

    உலகம் முழுவதும் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு வணக்கம் செலுத்துவோம் என்கிறார்.

    நன்றி

    நன்றி

    கொரோனாவை எதிர்த்து போராடும் இந்திய ராணுவம், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பெரிய வணக்கம். இந்தியாவில் அமைதி நிலவ இதுவும் ஒரு காரணம். நன்றி என்கிறார் இந்த வலைஞர்.

    வீரத்திற்கு வணக்கங்கள்

    வீரத்திற்கு வணக்கங்கள்

    தங்கள் உயிரை பணயம் வைத்து மற்றவர்களின் உயிரை காக்கும் இவர்களின் வீரத்துக்கு வணக்கங்கள்.

    போபாலில் பணி

    போபாலில் பணி

    போபாலில் நடந்த தூய்மைப்படுத்தும் பணி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+