கேப்டன் என் உறுப்புகளை எடுத்துக்கோங்க.. விஜயகாந்த்துக்கு ரசிகர்கள் உருக்கமான கோரிக்கை.. நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேப்டன் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.

விஜயகாந்த் சினிமா நடிகர், நடிகர் சங்க முன்னாள் தலைவர், அரசியல்வாதி, முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவைகளுக்கு மேல் மனிதாபிமானம் கொண்ட நல்ல மனிதர். எப்போதுமே உதவும் குணம் படைத்தவர்.

இல்லாதவர்களுக்காக விஜயகாந்த் வீட்டின் "அடுப்பு எந்நேரமும் எரிந்து கொண்டே இருக்கும்" என்பார்கள். அரிசி ஆலை அதிபராக இருந்தும் தந்தையின் காசில் வளர கூடாது என்ற வைராக்கியத்துடன் சென்னைக்கு வந்து சினிமாவில் வாய்ப்பு தேடினார் விஜயகாந்த்.

கம்பெனி

கம்பெனி


அப்போது ஒவ்வொரு கம்பெனியாக வாய்ப்பு கேட்டு ஏறி இறங்குவாராம். சில நேரங்களில் அந்த கம்பெனியில் உள்ளவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போது கூட பசியில் இருக்கும் விஜயகாந்தை சாப்பிட கூப்பிடாமல் உட்கார வைத்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் விஜயகாந்த் ஒரு நிலைக்கு வந்தவுடன் தன் வீட்டிற்கோ தன்னை தேடியோ யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு கொடுக்காமல் அனுப்ப மாட்டாராம்.

பெரிய ஹீரோ

பெரிய ஹீரோ

அது போல் இவர் பெரிய ஹீரோவானதும் சிறிய வேடத்தில் நடிப்பவர்களுக்கு ஒரு உணவு, ஹீரோ, ஹீரோயின்களுக்கு ஒரு உணவு என இருந்ததை அனைவருக்கும் ஒரே உணவு என தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டு பெற்றதும் விஜயகாந்த்தான். அதை கூட விஜயகாந்த் எப்படி கேட்டார் தெரியுமா? "எல்லாரும் போராடுவதே ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான். அப்புறம் ஏன்ய்யா இந்த பாகுபாடு? என கேட்டாராம்.

உடல்நிலை

உடல்நிலை

இப்படிப்பட்ட மனிதருக்கு அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மெலிந்த உடல் தேகத்துடன் விஜயகாந்த் என ஒரு போட்டோ வைரலானது. இதை பார்த்த மக்கள் கண் கலங்கி மனம் உடைந்தனர். இல்லாதவர்களுக்கு வாரி வாரி கொடுத்த இவருக்கா இந்த நிலை ? என நொந்து கொண்டனர்.

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

இந்த நிலையில் இன்றைய தினம் பிரேமலதா விஜயகாந்தின் பிறந்தநாளிற்காக விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோ வெளியிட்டார். அதை பார்த்ததும் மக்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். ஏற்கெனவே வைரலான போட்டோவை காட்டிலும் நல்ல உடல் தேகத்துடன் விஜயகாந்த் இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் விஜயகாந்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். அவற்றில் சில கமென்டுகளின் தொகுப்பு உங்களுக்காக இதோ..

அரசியல்

அரசியல்

அரசியலில் சரியான நேரத்தில் சில தவறான முடிவுகளை எடுத்ததால் இன்று உங்கள் உடல் நிலையும் கட்சியும் மோசம் ஆகிப்போனது. என்பது மிகவும் வேதனையான விஷயம் மீண்டும் நீங்கள் ஆரோக்கியமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.

 உடல் உறுப்பு

உடல் உறுப்பு

ஐயா... உங்களை இப்படி பார்க்க முடியவில்லை. ஊருக்கு கொடுத்த கை இப்படி துன்பப்படுவது தாங்க முடியவில்லை... உங்கள் உடல் சரியாக என்ன வேண்டுமோ என்னிடம் கட்டளையிடுங்கள்... எனது உடல் உறுப்புகளை உங்களுக்கு கொடுக்க நான் கடமை பட்டிருக்கிறேன்.

 நல்ல மனிதர்

நல்ல மனிதர்

மிக மிக நல்ல மனிதர் நல்லா பாத்துக்க அம்மா.தயவுசெய்து இந்த மாதிரி புகைப்படத்தை பகிராதீர்கள் பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு..

கேப்டன்

கேப்டன்

உங்களை பார்க்கும் போது இந்த வரிகள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன். விரைவில் உடல்நலம் பெற்று வர இறைவனை வேண்டுகிறேன்.. "ஊருக்காக வாழும் கலைஞன் தன்னை மறந்தான்" வாழ்த்துக்கள் திருமதி பிரேமலதா விஜயகாந்த்

நல்ல மனசு

நல்ல மனசு

உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் பெற்றிருக்கும் மிக‌ப்பெ‌ரிய வரம் உங்கள் குடும்பம் கேப்டன்.. நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+