சென்னை ஃபார்முலா 4.. சீறி பாயும் கார்கள் ஒரு பக்கம்.. பஸ், கார் என அமைதியான டிராபிக் மறுபக்கம்! வாவ்
சென்னை: தலைநகர் சென்னையில் பார்முலா 4 ரேஸ்கள் வெற்றிகரமாக நடந்துள்ளது. ஆசியாவிலேயே முதல்முறையாக இரவு நேர ரேஸாக சென்னை ஃபார்முலா 4 போட்டிகள் நடக்கிறது. இதற்கிடையே இந்த ரேஸ் தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதைப் பலரும் இணையத்தில் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கார் ரேஸுக்கான ரசிகர்கள் உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறார்கள். இதற்காகவே அமெரிக்கா தொடங்கி சீனா, ஜப்பான் ஆஸ்திரேலியா என எல்லா நாடுகளிலும் கார் பந்தயங்கள் நடக்கிறது. இதைத் தனியாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்றே அழைக்கிறார்கள்.

சென்னை சாலைகள்: இப்போது நம்ம சென்னையில் தொடக்கமாக பார்முலா 4 கார் போட்டிகள் நடக்கிறது. அதிலும் ஆசியாவிலேயே முதல்முறையாக இரவு நேரப் போட்டியாக இது நடக்கிறது. இந்த ஃபார்முலா 4 ரேஸின் முதல் போட்டிகள் நேற்றைய தினம் நடந்த நிலையில், இன்று இரண்டாவது நாள் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கிடையே இந்த ரேஸ் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் டிரண்டாகும் நிலையில், அதைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தீவுத்திடலில் ரேஸ் தொடங்கும் நிலையில், அங்கு இரு வழி சாலையாக இருக்கிறது. அதில் ஒரு மார்க்கத்தில் ஃபார்முலா 4 ரேஸ் நடக்கிறது. ரேஸ் கார்கள் அதில் அதிவேகத்தில் சீறி பாய்கிறது. அதேநேரம் மறுமார்க்கத்தில் போக்குவரத்து வழக்கம் போல இருக்கிறது. மறுமார்க்கத்தில் உள்ள சாலை இரண்டாகப் பிரிக்கப்பட்டு வாகனங்கள் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாராட்டு: ரேஸ் நடக்கும் போது வீடியோவில் ஒரு பக்கம் ரேஸ் கார்கள் சீறிப் பாய்வதும் மறுபக்கம் போக்குவரத்து அமைதியாக வழக்கம் போலவும் இருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர். சென்னையின் உட்கட்டமைப்பு மிகச் சிறப்பாக இருப்பதாகவும் இதன் காரணமாகவே ஒரு பக்கம் ரேஸ் மற்றும் வழக்கமான டிராபிக் மறுபக்கம் என்பது சாத்தியமாகி இருப்பதாகப் பலரும் பாராட்டுகிறார்கள். இன்னும் சிலர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பக்காவாக திட்டமிட்டு இருப்பதையே காட்டுவதாகவும் பாராட்டி வருகிறார்கள்.
வெளிநாடுகளில் நடக்கும் F1 ரேஸுக்கும் சென்னை பார்முலா 4 ரேஸுக்கும் என்ன வித்தியாசம்.. மலைக்க வைக்குதே
ஸ்ட்ரீட் சர்க்யூட்: பார்முலா ரேஸ்கள் பொதுவாக இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிரேத்தியக டிராக்குகளில் நடக்கும். அதேபோல ஸ்ட்ரீட் சர்க்யூட்களிலும் நடக்கும். இதில் டிராக்குகளை காட்டிலும் ஸ்ட்ரீட் சர்க்யூட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஏனென்றால் வழக்கமான சாலைகளில் ரேஸ் கார்கள் சீறிப் பாய்வதைப் பார்க்க எப்போதும் மக்களுக்கு ஆர்வம் இருக்கும். இதன் காரணமாகவே சென்னையில் ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் இந்த கார் ரேஸ் நடந்துள்ளது.
தீவுத்திடலைச் சுற்றி இந்த கார் ரேஸ் நடந்த நிலையில், கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என வழியாக மீண்டும் தீவுத்திடலை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை: ஹைதராபாத்தில் கடந்தாண்டு பார்முலா இ (மின்சார கார்களுக்கான ரேஸ்) நடைபெற்றது. அதன் பிறகு சென்னையில் தான் பார்முலா ரேஸ் நடக்கிறது. அதேநேரம் இது ஒரு முறை மட்டுமே நடக்கும் ரேஸாக மட்டும் இருக்கக்கூடாது என்றும் தொடர்ந்து இந்த ரேஸை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications