கொலையாளி கோட்சேன்னே சொல்லியிருக்கலாமே கமல்.. எதுக்கு மானே.. தேனே பொன்மானே!
சென்னை: மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை நேரடியாக கொலையாளி என சொல்லாமல் தேசபக்தர் என கூறப்படுகிற என்று மறைமுகமாக கமல்ஹாசன் குழப்பியடித்து ட்வீட் பதிவு போட்டிருப்பதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே படுகொலை செய்த நாள் இன்று. நாடு முழுவதும் தியாகிகள் தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தி படுகொலை நாளையொட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நாதுராம் கோட்சே பெயரை குறிப்பிடாமல் தேசபக்தர் என கூறப்படுகிற என்கிற தொனியில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
இதற்குத்தான் நெட்டிசன்கள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். @durai0672 என்பவர், ந்து பயங்கரவாதி கோட்ஸே காந்தியை கொலை செய்த நாள் இன்று என்று சொன்னால் சர்சையாகும் என்பதினால், மானே தேனே, பொன்மானே, patriotic, allegedly, assassination என்று.... என சுட்டிக்காட்டியுள்ளார்.
@mekalapugazh என்ற நெட்டிசன், Alledgedly..ரசிக்கிறோம்..அது மதவாதிகளால் என்றும் சேர்த்துச் சொல்லியிருந்தால்..கைதட்டி இருப்போமல்லவா. என்கிறார்.

இதற்கு பதில் கொடுத்துள்ள @gsekaran60 என்ற நெட்டிசன், தெனாலி டயலாக் தான் ஞாபகம் வருது. பயம்...பயம்.... பயம்.... 😂😂😂😂காந்தியை சுட்டது யாருன்னு ஸ்கூல் பசங்க கிட்ட கேட்டால் கூட தைரியமாக கோட்சேன்னு சொல்லுவாங்க... என கிண்டலடித்துள்ளார்.
@pkcomrade என்பவர், Who killed Gandhi... #RssKilledGandhi - இவ்ளோ தான் ஆண்டவரே மேட்டர்..! ஏன் அதை போட்டு வழ வழா......கொழ கொழா ன்னு இழுத்துட்டு இருக்கீங்க? என பதிவிட்டிருக்கிறார்.
@Athaullah19, ஒரு குறிப்பிட்டார்கள் கூறப்படுவதை போடுவதற்க்கு ஏன் ட்விட். பெரும்பான்மையான மக்கள் தீவிரவாதி என்றே அழைக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications