சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஷ்புவுக்கு இப்படியும் ஒரு ராசியாம்.. பாஜகவில் சேருவதற்கு முன்பே நெட்டிசன்ஸ் பொளேர்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகை குஷ்புவில் பாஜகவில் இணைவது உறுதியானதாக தகவல்கள் வெளியானது முதலே ஒரு பாஜக தலைவருக்கு தமிழ் நெட்டிசன்ஸ் என்ன மாதிரியான அளப்பரையான வரவேற்புகள் கொடுப்பார்களோ அதை இரவு முதலே அரங்கேற்றி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி குஷ்பு பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என குஷ்பு அளித்த ஒற்றை பதிலேயே ஆமாம் பாஜகவுக்கு போகிறே என்பதை அவர் அறிவித்துவிட்டதாக கருதப்படுகிறது.

இந்த பேட்டி வெளியானது முதலே நெட்டிசன்கள் விடிய விடிய குஷ்பு குறித்து பதிவுகளை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர். இதில் சுவாரசியமான பதிவுகளை படித்து ரசியுங்கள்.

சர்ச்சைகள்.. கல்வீச்சு தாக்குதல்கள்.. அவமானங்கள்.. குடுமிபிடி சண்டை.... அரசியலில் குஷ்புவின் பாதை!சர்ச்சைகள்.. கல்வீச்சு தாக்குதல்கள்.. அவமானங்கள்.. குடுமிபிடி சண்டை.... அரசியலில் குஷ்புவின் பாதை!

பாஜகவின் முதல்வர் வேட்பாளர்?

பாஜகவின் முதல்வர் வேட்பாளர்?

@vaisu_tweets என்பவர், அடுத்த விக்கெட்.. ஆனா குஷ்பூ பாஜகவை பேசின பேச்சுக்கு நம்ப தான் முடியல என்கிறார். @Vijayar50360173 என்பவரோ, பாஜக-குஷ்பு இருவருக்குமே இது win-win situation. ஏதோ ஒரு பெரிய திட்டமிருக்கு. தலைவர் அரசியலுக்கு ஒருவேளை வராவிட்டால் குஷ்புவே கூட அவர்களின் முதல்வர் வேட்பாளராக இருக்கலாம் என ஒரே போடாக போடுகிறார்.

ஆச்சரியமே இல்லை

ஆச்சரியமே இல்லை

@BUSHINDIA என்ற நெட்டிசன், இலவுகாத்த கிளிகளாக 2019 ஜீனிலிருந்து, ரஜினிகாந்த் கட்சி தொடங்கி, அதில் இணைய காத்திருந்த இருவர், ஐபிஸ் அண்ணாமலை மற்றும் குஷ்பு. காத்துகாத்து காலில் வேரு விடவேண்டாமென அண்ணாமலை வழியில் பாஜக வருகிறார் குஷ்பு. வட இந்தியாவை பூர்வீகமாக க் கொண்டவர் பாஜகவை நாடிசெல்வது ஆச்சர்யமே இல்லை! என பதிவிட்டுள்ளார்.

இப்படியும் ராசியாம்

இப்படியும் ராசியாம்

@SamJabez15 என்ற திமுக ஆதரவாளர், வாழ்த்துக்கள்.., குஷ்பு... பாஜகவில் குஷ்பு ஆட்சியை பறிகொடுக்கிறது பாஜக... சற்று ஒரு அரசியல் பார்வையில் 2009 ல் திமுகவில் இனைகிறார் 2011 ல் ஆட்சியை இழந்தது திமுக 2012 ல் காங்கிரஸ் கட்சியில் இனைகிறார், 2014 ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது... என பதிவிட்டு பாஜகவுக்கு நல்லது அல்ல என எச்சரிக்கிறாராம்.

சுயநலம்தானாம்

சுயநலம்தானாம்

@Mubarak_ifs என்பவர், குஷ்பு அவர்களால் நடுநிலையாளர்களும், உடன் பிறப்புகளும் கொஞ்சம் வருத்தம்தான் ஆனால் குஷ்பு திமுக மற்றும் காங்கிரஸில் பெரிதாக என்ன பன்னினாங்கனு பார்த்தால் ஒன்னும் பன்னல , அதையேதான் பாஜக ல பன்னபோராங்க சோ பெரிதாக அலட்டிக்கொள்ள ஒன்னுமில்லை !! என போனால் போகட்டும் என பதிவிட்டுள்ளார். @habeertty என்பவர் பாஜக வில் குஷ்பு இனைவது அவரின் சுயநலத்தை தவிர வேறு ஏதும் இல்லை என்கிறார்.

English summary
Here the Netizens Comments on Khushbu to Join BJP row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X