என்னது சசிகலா தனிக்கட்சி தொடங்கியாச்சா? கட்சி பேரு இதுவா? யாரு பார்த்த வேலையோ? சோஷியல் மீடியா 'பரபர'
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமை கோரி நிற்கும் சசிகலா இன்றுதான் சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா பங்களாவுக்கு எதிராக புது வீட்டில் குடியேறினார். அதற்குள் சசிகலா அஇஅதிமுக- AIADMK என வரும் வகையில் புதிய கட்சியை தொடங்கிவிட்டதாக லெட்டர் பேடு "ரெடி" செய்து சமூக வலைதளங்களில் ஒரு குரூப் உலாவ விட பரபரப்பு பற்றிக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரில் சிறை வாசம் அனுபவித்தார் சசிகலா. சிறைக்குப் போகும் போது அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியுடன் போனார். அப்போது சசிகலாவை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் சசிகலா சிறையில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியை பறித்தனர். இது தொடர்பான சசிகலாவின் சட்ட போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கத்தில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே துரத்தியடிக்கப்பட்டுவிட்டார்.

புது வீடு, புது கச்சேரியா?: 4 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் சசிகலா வெளியே வந்து 4 ஆண்டுகளாகப் போகிறது. இன்னமும் அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்கிற லாவணியைத்தான் பாடிக் கொண்டே இருக்கிறார். அதிரடியான அரசியல் நடவடிக்கை எதனையும் சசிகலா முன்னெடுக்கவே இல்லை. சட்டப்படியான சொத்து சிக்கல்களை முடித்துவிட்டுதான் ஆட்டத்தை சசிகலா ஆரம்பிப்பார் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் சசிகலா சென்னை போயஸ் கார்டனில் புதிய பங்களாவில் இன்று கிரகப்பிரவேசம் நடத்தி குடியேறி உள்ளார். ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு நேர் எதிராக இந்த பிரம்மாண்ட பங்களா கட்டப்பட்டுள்ளது. இனிதான் சசிகலாவின் ஆட்டம் ஆரம்பமாகும் என கூறப்பட்டும் வருகிறது.

என்னது சசிகலா கட்சி தொடங்கியாச்சா?: இந்நிலையில் சமூக வலைதளங்களில் சசிகலாவின் கட்சி என்ற பெயரில் ஒரு படம் உலா வருகிறது. "அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் லெட்டர் பேடு ஒன்றை ரெடி செய்து அதில் போயஸ் கார்டனில் சசிலா குடியேறியது; விநாயகரை வழிபட்டது; ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்தது என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 'கழகப் பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம், அஇஅதிமுக எனவும் அதில் எழுதப்பட்டுள்ளது. பார்த்த உடனேயே இது யாரோ பார்த்த வேலை என்பது தெளிவாகவே தெரிகிறது. ஆனாலும் அம்மா திமுகவா? AIADMKவா? என்கிற விவாதங்களும் இந்த சோ கால் லெட்டர் பேடை முன்வைத்து களைகட்டுகிறது சோஷியல் மீடியாவில்.
ஓவர் அட்ராசிட்டீஸ்!
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications