நடிகை குஷ்பு கோவில் எங்கே இருக்கு? உண்மையா பொய்யா? சமூக வலைதளங்களில் பரபர 'விவாதம்'
சென்னை: நடிகை குஷ்பு கோவில் எங்கே இருக்கிறது? உண்மையா பொய்யா? என்பது சமூக வலைதளங்களில் தற்போது அனலடிக்கும் விவாதமாக இருந்து வருகிறது.
சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். மனிதர்களிடையே பிளவையும் ஏற்றத் தாழ்வுகளையும் உருவாக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உதயநிதி கருத்து. இதற்கு பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச அகோரி சாமியார் ஒருவர், உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ10 கோடி விலை அறிவித்தும் உள்ளார்.

குஷ்பு அறிவுரை: இந்த பஞ்சாய்த்தில் நடிகை குஷ்புவும் இணைந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக நடிகை குஷ்பு, முஸ்லிம் பின்னணியைக் கொண்ட எனக்காக மக்கள் கோவில் கட்டினர். அதுதான் சனாதன தர்மம். அத்தனையையும் நம்பவும் மதிக்கவும் வேண்டும். ஏற்கவும் வேண்டும் என அறிவுரை வழங்கி இருந்தார்.
குஷ்பு கோவில்: இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஒரு விவாதம் களைகட்டி இருக்கிறது. அதாவது நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டிய தமிழ்நாட்டு ரசிகர்கள் என காலம் காலமாக சொல்கின்றனர். ஆனால் அப்படி ஒரு கோவில் எங்கே இருக்கிறது என்பதுதான் பெரும் குழப்பம் என்கிற கருத்துடன் இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
குண்டூர் பர்மா காலனி?: இந்த விவாதத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் விகடன் இதழ், குஷ்பு கோவிலை தேடிப் போய் எழுதிய செய்தியும் அதிகமாக பகிரப்படுகிறது. அதில், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சாலையில் சுமார் அரை மணி நேரப் பயணத்தில் உள்ளது குண்டூர் பர்மா காலனி. இங்குதான் குஷ்புக்குக் கோயில் கட்ட முயற்சித்த தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். கோயில் கட்டுவதில் மிகத் தீவிரமாக இருந்தவர்களுள் ஒருவர் பாபு. அவர் சொல்கிறார்...... 'ஒரு தீபாவளிக்கு முதல் நாள் நைட்டு. திருச்சி மாரீஸ் தியேட்டர்ல படம் பார்த்துட்டு வர்றோம். அப்பதான் எங்க செட்டுல இருந்த பவுல்ராஜ் 1,000 பிட் நோட்டீஸ் அடிச்சு எடுத்துட்டு வந்து தந்தான். ஏற்கெனவே அவன் படத்துக்கு வரலைங்கற கோபத்துல இருந்த நாங்க அந்த நோட்டீஸைப் படிச்சுக்கூடப் பார்க்காம பாலத்துக்குக் கீழே வீசி எறிஞ்சோம். அப்புறமா நோட்டீஸைப் பாத்தா குஷ்புக்குத் தேவாலயம் கட்டப்போகிறோம். தங்களால் இயன்ற உதவியைச் செய்யவும்னு இருந்துச்சு. இது நாங்க விளையாட்டுக்குப் பேசிக்கிட்டு இருந்த விஷயம். அவன் சீரியஸா எடுத்துக்கிட்டு நோட்டீஸே அடிச்சுட்டு வந்துட்டான். சரினு நாங்களும் மிச்சம் இருந்த நோட்டீஸை அன்னிக்கு மலைக்கோட்டை ஏரியால உள்ளவங்க கிட்ட கொடுத்தோம். இப்போ பவுல்ராஜ் ஃபாரீன்ல இருக்கான்''. ''பொதுவா இந்த மாதிரி பிட் நோட்டீஸ் கொடுத்தா, வாங்கிப் படிக்காம கீழே போட்டுடுவாங்க. ஆனா, அந்த நோட்டீஸ் ஒண்ணுகூட கீழே விழலை. அவ்ளோ ரெஸ்பான்ஸ். ஆனா, அடுத்த ரெண்டு, மூணு மாசம் எங்க ஏரியா போஸ்ட்மேன்தான் ரொம்ப கஷ்டப்பட்டாரு. எக்கச்சக்கமா லெட்டர்ஸ் வரும். சில பேரு நாங்களும் உங்க முயற்சியில இணைஞ்சிக்கிறோம்னு எழுதி இருப்பாங்க. நிறைய லெட்டர்ஸ் கெட்ட கெட்ட வார்த்தையில திட்டித்தான் வரும். புறம்போக்கு இடம் ஒண்ணை செலக்ட் பண்ணி கட்டலாம்னு ப்ளான் பண்ணினோம். ஆனா, அப்புறம் விட்டுட்டோம். மீடியா எங்களை விடலை. கோயில் கட்டியாச்சு, கும்பாபிஷேகம் பண்ணியாச்சுனு ஏகப்பட்டது கிளப்பிவிட்டாங்க. நாங்களும் படிச்சுச் சிரிச்சுக்குவோம்' என்று சிரிக்கிறார் பவுல்ராஜ்...... என்பதுதான் விகடன் செய்தி.
திருச்சி உறையூரில்? : அத்துடன் குஷ்புவுக்கான கோவில் திருச்சி உறையூரில் இருக்கிறது என சிலர் பதிவிட்டுள்ளனர். ஆனால் குஷ்புவுக்கு இதுதான் கோவில்.. இப்படித்தான் இருக்கிறது என்கிற ஆதாரங்களை கொடுங்கள் என்கிறது ஒருதரப்பு. இருந்த போதும் குஷ்புவுக்கு கோவில் கட்டினது உண்மைதான்.. கடும் எதிர்ப்பால் அதை இடித்துவிட்டார்கள் எனவும் சொல்கின்றனர்.
ஆமா குஷ்புவுக்கு கோவில் இருக்கிறதா? இல்லையா?
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications