தமிழ்நாடு அரசு டெக்னிக்கலா செம்ம! பட்ஜெட்டை வாசிக்க வாசிக்க சோசியல் மீடியாவில் பக்கா லைவ் அப்டேட்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஏராளமான திட்டங்களின், அறிவிப்புகளின் சங்கமமாக குவிந்து கிடக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை, தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி பட்ஜெட் அறிவிப்புகளை உடனுக்குடன் சமூக வலைதளங்களை உள்ளடக்கிய ஊடகங்களில் கொண்டு சேர்த்தது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
லோக்சபா, சட்டசபைகளில் பட்ஜெட் தாக்கலின் போது புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெறுவது வழக்கம்தான். ஆனால் ஒரு பட்ஜெட் முழுமையாகவே புதிய திட்டங்களாகவும் அறிவிப்பாகவும் நிதி ஒதுக்கீடாகவும் சரவெடி போல இருந்தது தமிழ்நாடு பட்ஜெட் என்பது மிகையல்ல. பன்னாட்டு புத்தக கண்காட்சி தொடங்கி நிதி நிலைமை குறித்து வரை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உணர்வுப்பூர்வமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் பட்ஜெட் உரையை வாசித்தார்.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் என்பது வழக்கத்தை விட தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தியதாக இம்முறை அமைந்தது. தமிழ்நாட்டு வரலாற்றில் முதல் முறையாக பட்ஜெட்டுக்கு டிரைலர், டீசர் வெளியிட்ட அரசு ஆளும் திமுக அரசுதான் என பாராட்டப்படுகிறது. ஏனெனில் பட்ஜெட் தாக்கலுக்கு முதல் நாளே இலச்சினை - முத்திரை வெளியீடு, பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்பு இருக்கும் என்கிற முன்னோட்டம் ஆகியவற்றை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
இதனைத் தொடர்ந்து சட்டசபையில் பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்துக் கொண்டிருக்கும் போது சோசியல் மீடியாவில் ஒவ்வொரு திட்டத்தையும் விவரித்து உரிய கார்டுகளுடன் செம்ம லைவ் அப்டேட் கொடுத்தனர். பெரும்பாலான ஊடகங்களுக்கு இந்த லைவ் கார்டுகள் ஒளிபரப்புக்கு பெரும் உதவியாகவும் அமைந்தன. அத்துடன் நிற்காமல் அனைத்து ஊடகங்களுக்கும் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களுடன் இந்த கார்டுகளை இடைவிடாமல் அனுப்பிக் கொண்டே இருந்தனர். சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை ஒருபக்கம் லைவ்வாக வாசிக்க, செய்தி மக்கள் தொடர்புத் துறை உடனுக்குடன் மக்களுக்கான சமூக வலைதளம், ஊடகங்களுடன் இன்னொரு பக்கம் விரிவாக அப்டேட் செய்து கொண்டிருந்தது பெரும் வரவேற்புடன் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications