மகாபிரபு நீங்களுமா அக்கா? வானதி சீனிவாசன் பகிர்ந்த லியோ போட்டோ- எப்படி எல்லாம் ரியாக்ஷன் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலரை டிவியில் பார்ப்பது போல பாஜக மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் பகிர்ந்த ஒரு போட்டோவை முன்வைத்து சமூக வலைதளங்களில் 'பொங்கல்' வைத்து கொண்டிருக்கின்றனர் பாஜகவினர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் படித்த லியோ பட டிரைலர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் விஜய் கெட்டவார்த்தை பேசும் காட்சியும் அப்படியே இடம்பெற்றுள்ளது. டிரைலரை பார்க்க சென்னை ரோகிணி தியேட்டருக்கு போன ரசிகர்கள் 400 இருக்கைகளை உருக்குலைத்து வெறியாட்டம் போட்டுவிட்டு வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த களேபரங்களுக்கு மத்தியில் பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தமது ஃபேஸ்புக், எக்ஸ் பக்கங்களில் #LeoTrailer @ Home என்ற கேப்சனுடன் ஒரு படத்தைப் பகிர்ந்திருந்தார். அப்போட்டோவில் லியோ டிரைலரை வீட்டில் அமர்ந்து டிவியில் பார்த்து கொண்டிருக்கிறார் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. இந்த ஒரு போட்டோவுக்குதான் அத்தனை 'பொங்கல்' வைக்கப்பட்டு வருகிறது சமூக வலைதளங்களில்.
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரக் கூடிய அளவிலான சிலரது கருத்துகள்:

Jeyakumar Srinivasan: தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயண ஒளிக்காட்சியை இப்படி பார்த்து படம் எடுத்து பதிந்தால் இன்னும் பலரை சென்று சேரும்.
T Arumugakani: கொஞ்சம் அரசியல்வாதியாக மாறுங்கள்.
Rajan Praba : உண்மையான தொண்டர்களை வெறுப்பு ஏற்றுகிறார்.
Raja Soman: இது ரொம்ப முக்கியம் அக்கா.
Sivaji K: வருங்கால முதல்வர் அண்ணாமலை அவர்களின் உண்மையை விசுவாசி வானதி அவர்கள் தற்சமயாக விளையாட்டாக டிவி பார்த்து உள்ளார் இது பெரிதாக எடுக்க வேண்டாம்

Mohanraj Rangasamy: அக்கா இது என்ன லியோ படத்திற்கு இலவச விளம்பரமா.
மக்கள் பணியின் பொறுப்பில் இருக்கும் நாம் இதை தவிர்க்கலாம்
Rafeek Yas: மகாபிரபு நீங்களுமா அக்கா என்னால நம்ப முடியல அக்கா
Rahumon Rajendran: பாரதமே போற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியின் தற்போதைய நிலை! Movie promotion
Ram Chandran: தலைவர் அண்ணாமலை உடைய என் மண் என் மக்கள் அதை பகிரலாமே..
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?











Click it and Unblock the Notifications