எங்க அத்வானியை பற்றி பேசி பாருங்க..சோனியாவை விமர்சித்த வானதி சீனிவாசனுக்கு நெட்டிசன்ஸ் செம டோஸ்!
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பாஜக மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் வானதி சீனிவாசனுக்கு காட்டமான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சோனியா, பிரியங்காவை விமர்சித்த வானதி சீனிவாசன் அறிக்கை: சென்னையில் திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருமதி சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா உள்ளிட்ட 'இண்டி' கூட்டணியின், வாரிசு பெண் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய சோனியா, பிரியங்கா இருவரும் பெரியார் ஈ.வெ.ரா., அண்ணா, கருணாநிதி ஆகியோரை மட்டுமே புகழ்ந்து பேசினர்.

மறைந்த காங்கிரஸ் தலைவர்கள்: திமுகவினருக்கு தமிழ்நாட்டின் வரலாறு என்பது பெரியார் ஈ.வெ.ரா.,விலிருந்து தான் தொடங்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது திமுக முதன் முதலில் ஆட்சிக்கு வந்த 1967-ம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது போலவே பேசுவார்கள். ஆனால், சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் முதல்வராக இருந்த ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கர்ம வீரர் காமராஜர், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட ஆர்.வெங்கட்ராமன், பசுமைப் புரட்சிக்கு காரணமான சி.சுப்பிரமணியம், காமராஜர் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கன், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக இருந்த இளையபெருமாள் என பல்வேறு தலைவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக, பொருளாதார மாற்றங்களுக்கும் வழிவகுத்தவர்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள்.
பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்?: ஆனால், இவர்களின் பெயர்களை மறந்தும் கூட சோனியா, பிரியங்கா இருவரும் உச்சரிக்கவில்லை. பிரியங்கா பேசும்போது, பெரியார் ஈ.வெ.ரா. எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகத்தை குறிப்பிட்டார். இலக்கிய வளமையும், பல்வேறு சீர்திருத்த கருத்துக்களையும் கொண்ட உலகின் மிக பழமையான. மொழி தமிழ். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற புறநானூற்று வரியைவிட சமத்துவம் ஏதாவது உண்டா? திருக்குறளில் இல்லாத கருத்துக்களா? மகாகவி பாரதியைவிட பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த புரட்சிக்கவி யாராவது உண்டா? இவற்றையெல்லாம் குறிப்பிடாமல், திமுக தலைவர்களைப் பற்றி மட்டும் பேசியிருக்கிறார்கள்.

காங்கிரஸுக்கான வானதி வருத்தம்: இவற்றையெல்லாம் பார்த்து உண்மையான காங்கிரஸ்காரர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். காமராஜர் காலம் வரை இருந்த காங்கிரஸ் வேறு, இப்போதிருக்கும் காங்கிரஸ் வேறு என்பதை சோனியாவும், பிரியங்காவும் உறுதிப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் இனி தேசிய பாதையில் பயணிக்காது. திமுகவின் பிரிவினை பாதையில் தான் பயணிக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளர். ஒருவகையில்
இதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்போதிருக்கும் காங்கிரஸ் தேசிய சிந்தனை கொண்ட கட்சி அல்ல. திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட கட்சி. எனவேதான், கடந்த இரு மக்களவைத் தேர்தல்களில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கொடுக்காம் காங்கிரஸை மக்கள் நிராகரித்தார்கள். இனி வரும் தேர்தல்களிலும் நிராகரிப்பார்கள். இவ்வாறு வானதி சீனிவாசன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்வானி பற்றி பேசினால்.. : இதனை வானதி சீனிவாசன் தமது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார். வானதி சீனிவாசனின் ஃபேஸ்புக் பக்கத்தில் இதற்கு கடும் விமர்சனங்களும் இடம் பெற்றுள்ளன. Paulraj Paulraj என்ற நெட்டிசன், நீங்கள் எதைச் தூக்கி பேசினாலும் உங்கள் ஆட்சியை மக்கள் தூக்கி வீசப்பட்ட வேண்டும் என்ற கோணத்தில் திரும்பி விட்டார்கள். நடக்கும் என குறிப்பிட்டுள்ளார் . Ramasamy Natarajan என்ற பதிவர், அத்வானி அவர்களை பற்றி இரண்டு மேடைகளில் புகழ்து பேசி பாருங்கள். உங்கள் MLA பதவி பறிக்கப்படும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications