சென்னை விஜயவாடா வந்தே பாரத் ரயிலை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்.. ஆச்சர்ய காரணம்
சென்னை: சென்னை விஜயவாடா இடையே இயக்கப்பட வரும் 7ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் வேகம் கிண்டலுக்குள்ளாக்கப்படுகிறது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 5.45 நிமிடத்திலும், கிராண்ட் ட்ரன்க் விரைவு ரயில் 6 மணி நேரத்தில் விஜயவாடாவை கடப்பதால் வந்தே பாரத்தை கிண்டல் செய்கிறார்கள்.
வந்தே பாரத் ரயிலால் 180 கிமீ வேகம் வரை செல்ல முடியும். தற்போதைய நிலையில் வந்தே பாரத் ரயிலை 130 கிமீ வேகத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் 130 கிமீ வேகத்தில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ரயில் தண்டாவாளங்கள் அந்த அளவிற்கு பலமாக இல்லை என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.

இந்தியாவில் 180 கிமீ வேகத்தில் செல்லும் அளவிற்கு தண்டவாளம் மற்றும் ரயில் கட்டமைப்புகளை மாற்ற வேண்டும். அதற்கு மிகப்பெரிய அளவில் செலவு ஆகும். எனவே இருக்கும் கட்டமைப்பில் 130 கிமீ வேகம் வரையில் தான் போக வேண்டும். தமிழ்நாட்டில் ரயில்கள் 100 முதல் 110 கிமீ வேகம் வரை ரயில்கள் செல்கின்றன. தமிழ்நாட்டிற்கு வெளியே மும்பை, கொல்கத்தா, டெல்லி,ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் 130 கிமீ வேகம் வரை செல்கின்றது.
இந்நிலையில் வந்தே பாரத் ரயில்கள் 130 கிமீ வேகம் வரை செல்கின்றன. அதிக இடங்களில் நிற்காமல் செல்கின்றன. அதனால் அதன் பயண நேரம் மற்ற ரயில்களை விட குறைவாக உள்ளது. தமிழ்நாட்டிற்குள் தற்போது கோவை சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மைசூருக்கு ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதுதவிர சென்னை விஜயவாடா இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலை வருகிற 7-ந் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார். 8-ந்தேதி முதல் பயணிகள் ரயில்வே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயவாடாவில் இருந்து கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி வழியாக சென்னைக்கு வந்து அடையும். இதே மார்க்கத்தில் சென்னையில் இருந்து காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர் வழியாக விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. விஜயவாடாவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் சுமார் 6 மணி நேரம் 30 நிமிடத்தில் சென்னையை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேணிகுண்டாவில் ரயில் நின்றால் திருப்பதிக்கு எளிதாக பயணிகள் செல்ல முடியும். விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கும், சென்னையில் இருந்து திருப்பதி செல்வோருக்கும் இந்த வந்தே பாரத் வசதியாக இருக்கும். ஆனால் இதுவரை ரேணிகுண்டாவில் ரயில் நிற்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை
இந்நிலையில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 5.45 நிமிடத்திலும், கிராண்ட் ட்ரன்க் விரைவு ரயில் 6 மணி நேரத்தில் விஜயவாடாவை கடப்பதால், 6.30 மணி நேரத்தில் செல்ல போகும் சென்னை விஜயவாடா வந்தே பாரத் ரயிலை நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications