சமூக வலைதளங்களில் விவாதப் பொருளான சீமானின் ரூ40,000 டீ சர்ட், உருத்திராட்சம்! தகிக்கும் தம்பிகள்!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் டி சர்ட் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
சென்னை: சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டிருக்கும் டீ சர்ட், தங்க செயினில் உருத்திராட்ச கொட்டை இப்போது பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உடைகள், சொத்துகள் ஆகியவை தொடர்பாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களில் இது டிரெண்டாங்கி பல பஞ்சாயத்துகளை உருவாக்கி இருக்கிறது. இதற்காக தாங்கள் வாங்கிய பொருட்களின் ரசீதுகளை பதிவேற்றம் செய்த கூத்துகளும் அரங்கேறின.

இந்த சர்ச்சைகளின் தொடர்ச்சியாக இப்போது நாம் தமிழர் சீமானின் உடை விவகாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. சீமானுடன் எடுத்த செல்பி படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டது. அப்படத்தில் சீமான் அணிந்திருக்கும் டீ சர்ட், தங்க செயின்கள் குறித்துதான் இப்போது பேசப்பட்டு வருகிறது.
@_kabilans என்ற நெட்டிசன், தம்பிகளுக்கு உணவு வாங்க காசில்லை ஈரோட்டில்தங்க இடமில்லை தெரு ஓரத்தில் படுத்திருந்தானுக ஆனா அண்ணன் அணியும் ஒரு டீ சர்ட் 40 ஆயிரம் ரூபாய் தங்கத்தில் சங்கிலி செழிப்பாக வாழ்ந்து கொண்டு 12 லட்சம் தேர்தல் நிதியாக உழைக்கும் தம்பிகளிடம் வாங்கி கட்சி நடத்துகிறார் ஏன் இந்த பித்தலாட்டம் என பதிவிட்டிருந்தார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்குமரன், இந்த டீ சர்ட் வேணும்னா சென்னை லொயோலா கல்லூரி எதிர்புறமுள்ள Upscale என்ற கடையில் கிடைக்கும் போய் வாங்கிக்கலாம். விலை ரூ850தான். வாங்கிக் கொடுத்தது நானும் தமி சாட்டை துரைமுருகனும்தான் பதிலளித்துள்ளதாகவும் ஒரு ஸ்கிரீன் ஷாட் பகிரப்படுகிறது. அதன் உண்மைத்தன்மை தெரியவில்லை.

வெற்றிக்குமரன் பெயரிலான இந்த ட்வீட்டை ஷேர் செய்து @U2Brutus_off, ந்த T-shirt லயோலாக்கு எதிர்புறமுள்ள Upscale கடையில் வாங்குறது இருக்கட்டும்ணே. கழுத்துல மின்னுற தங்கம் கல்யாணி கவரிங்ல வாங்குனதுன்னு சொல்லு.வாங்கி கொடுத்தது அந்தமான்-நிக்கோபர் தீவு அதிபர்னு சொல்லு என கிண்டலடித்துள்ளார். மேலும் ஈழத்துக்கு போராடியவர்கள் எல்லாம் சொத்தை இழந்து வாடகை வீட்டில் வசிக்கிறார்கள்.. ஆனால் ஈழத்துல போய் போட்டோ எடுத்துட்டு வந்தர் கார், பங்களா, Blue berry shirt.. புத்தம் புது செயின்கள்...அந்த டீ சர்ட் மட்டுமே 40 ஆயிரம்னு சொல்லிக்குறாங்க... பாவம் ஏழை தமிழ்ப்பிள்ளை... எனவும் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications