மத்தவங்க ஏதாவது சொன்னா, வடிவேலு மீம்ஸ வச்சி கிண்டல் பண்றீங்க.. ரஜினி சொன்னா வடிவேலே கிண்டல் பண்றாரு
சென்னை: எந்த நேரத்தில ரஜினிகாந்தை இப்படி ஒரு வார்த்தை சொன்னாரோ? சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவரை கிண்டலும் கேலியும் செய்து வருவதை பார்க்க முடிகிறது.
அப்படி என்ன சொன்னார்? சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் (அவர் அப்படித்தான் சொல்லி நிருபர்களை அழைத்திருந்தார். ஆனால், கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்பது வேறு விஷயம்) மீன் குழம்பு வைத்த பானையில் சர்க்கரை பொங்கல் செய்தால் எப்படி இருக்குமோ அதேபோல சிஸ்டம் மாறாமல் தலைவர்கள் மட்டும் மாறினால், எதுவும் எடுபடாது என்று தெரிவித்தார்.
அவர் கூறியது சரியான கருத்தாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் சொன்ன உதாரணம், பலவகைகளிலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மீன் குழம்பு என்றால் சாமானியமா? அசைவ உணவு சாப்பிடுபவர்களைக் குறைத்து பேசுகிறாரா என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவுகின்றன. இன்னொரு பக்கம் அது தொடர்பான மீம்ஸ்கள் வைரலாகி சுற்றிவருகின்றன.

மீன் வாசம்
என்னயா சர்க்கரை பொங்கல்ல மீன் குழம்பு வாசனை வருது..😂 என்று ஒரு திரைப்படத்தின் காட்சியை, ரஜினி பேச்சோடு பொருத்தி, கிண்டல் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

கட்அவுட்
ரஜினிகாந்த் முதல்வராக வருவார் என்று நினைத்து, அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து வந்தனர் ரசிகர்கள். ஆனால் அந்தக் கட் அவுட் திருப்பி துப்பி விட்டது என்பது போல ஒரு மீம் உருவாக்கியுள்ளார் இந்த நெட்டிசன். அதாவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை பரிசாக கொடுத்து விட்டார் ரஜினிகாந்த் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

புது சட்டி
போயி புதுச ஒரு சட்டிய வாங்கி பொங்கல் செய்யவேண்டியது தானே.. இப்படி சொல்கிறார் இவர். ஏன் அதே சட்டியில் இரண்டு வெவ்வேறு சமையல் செய்ய வேண்டும் என்கிறார்.

தத்துவம் சொன்னா
ஏன் திமிங்கலம்... மீன் கொழம்பு பாத்திரத்தை கழுவிட்டு சக்கர பொங்கல் வைக்க சொன்னா... பாத்திரத்தை கழுவாம தலை சிறந்த தத்துவத்தை சொன்னவரை கழுவு கழுவுனு கழுவுதே.... என்ன ஊருயா இது??

வடிவேலுக்கு பதில்
வா தலைவா சினிமால வடிவேலு இல்லாத வெற்றிடத்தை உன்னால் தான் நிரப்ப முடியும் சீக்கிரம் அடுத்த பேட்டி கொடுங்க தலீவரே வீ ஆர் வெயிட்டிங்

நேரில் வந்து கிண்டல்
மத்தவங்க ஏதாவது சொன்னா வடிவேலு கிண்டல் டெம்ளேட் போட்டு கிண்டல், நான் கருத்து சொன்னா வடிவேலுவே நேரா வந்து கிண்டல் பண்றாரே என்பது போல ரஜினி சொல்வதாக கூறுகிறது இந்த மீம். ரஜினி பேட்டியை, வடிவேலு தனது பேட்டியின்போது, கிண்டல் செய்திருந்ததை வைத்து இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications