4 மணி நேர கட்டுப்பாடு.. யுபிஐ மூலம் பணம் அனுப்புறீங்களா? வரப்போகுது புதிய ரூல்.. இனி ரொம்ப கஷ்டம்
சென்னை: அதிகரித்து வரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளை தடுக்க, இரண்டு நபர்களுக்கு இடையே முதல் முறையாக நடக்கும் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் அனுப்பும் பரிவர்த்தனைக்கு குறைந்தபட்ச நேரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்முறை நீங்கள் ஒரு கணக்கிற்கு 2,000 ரூபாய் அனுப்புகிறீர்கள் என்றால்.. அதன்பின் மீண்டும் அவர்களுக்கு பணம் அனுப்ப 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

என்னென்ன கட்டுப்பாடு; அதாவது நீங்கள் நேரடியாக ஒரு நபருக்கு 2000 ரூபாய்க்கு மேல் முதல் முறையாக அனுப்பிவிட முடியாது. அதே சமயம் இது தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு மட்டும் பொருந்தும். பிஸ்னஸ் கணக்குகளுக்கு பொருந்தாது . அதாவது கடைகளில் நீங்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கினால் அந்த 10 ஆயிரம் ரூபாய்க்கு அப்படியே யுபிஐ மூலமே பணம் செலுத்தலாம்.
ஆனால் அதுவே உங்களின் புதிய நண்பர் ஒருவர் உங்களிடம் 3000 கேட்டார் என்றால் முதலில் 2000 அனுப்ப முடியும். 4 மணி நேரம் கழித்தே மீதம் உள்ள தொகையை அனுப்ப முடியும். உங்கள் கணக்கில் இருந்து மோசடியாளார்கள் பணம் திருடுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
சிக்கல் என்ன: இந்த செயல்முறை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் சில சிக்கலை ஏற்படுத்தும்என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இணையப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த புதிய விதி இறுதி செய்யப்பட்டால், உடனடி கட்டணச் சேவை (IMPS), ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (RTGS) மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகம் (UPI) ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பான டிஜிட்டல் பேமெண்ட்டுகளை எளிதாக செய்ய முடியும்.
இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யுபிஐ கட்டணம்: இப்போதெல்லாம் நாடு முழுக்க ஆன்லைன் வர்த்தகம் அதிகம் ஆகிவிட்டது. முக்கியமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ சாதனங்கள் மூலம் பணம் செலுத்துவது அதிகம் ஆகிவிட்டது. சாதாரணமாக டீ குடிப்பது தொடங்கி வீட்டு வாடகைக்கு, மின்சார பில் கட்டுவது வரை பல விஷயங்களுக்கு மக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை பின்பற்றுகிறார்கள்.
இதன் காரணமாக நேர விரயம் குறைகிறது. ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏடிஎம் சார்ஜ் இல்லை. அதோடு உடனடியாக பணம் செலுத்த முடிகிறது. கையில் எப்போதும் பணத்தோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் யுபிஐ பேமெண்ட் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது.
எங்கும் யுபிஐ; அனைத்து விதமான சேவைகளுக்கும் தற்போது யுபிஐ பயன்பாடு வந்துவிட்டது. பெரிய பெரிய நிறுவனங்கள் தொடங்கி சாதாரண சாலையோர கடைகளுக்குகூட யுபிஐ வந்துவிட்டது. அதேபோல் பெரிய பெரிய அரசு நிறுவனங்கள் கூட யுபிஐ பயன்பாட்டை தொடங்கிவிட்டன. இன்னொரு பக்கம் ஆன்லைன் பேமெண்ட் அனைத்தும் தற்போது யுபிஐ சேவையை வழங்குகின்றன. மக்களும் யுபிஐ பயன்பாட்டை வெகுவாக விரும்ப தொடங்கிவிட்டனர்.
கட்டணம் விதிப்பு; இந்த நிலையில் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே வங்கிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு சிறிய அளவிலான சேவை வரிகளும் கூட விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தனைக்கு மேல் செய்கையில் வங்கியில் இருந்து அதற்கான பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது வணிக பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. யுபிஐ மூலம் பிபிஐ மோடில் வணிக பரிவர்த்தனைக்கு பணம் அனுப்பினால் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2000 ரூபாய்க்கு மேல் பிபிஐ முறையில் பணம் அனுப்பினால் இந்த கட்டணம் பொருந்தும்.
அதன்படி வணிக பரிவர்த்தனைக்கு ஒரு கடைக்காரர் ப்ரீபெய்டு முறையில்.. அதாவது வாலட் முறையில் பணம் செலுத்தினாலோ, ப்ரீபெய்டு கார்ட் முறையில் பணம் செலுத்தினாலோ அதற்காக 0.5 சதவிகிதம் முதல் 1.1 சதவிகிதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். மக்கள் சிலர் இப்போது வாலட் மூலம் கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த வாலட் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு அதிகபட்சம் 1.1 சதவிகிதம் வரை கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. துறை ரீதியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் சதவிகிதம் மாறும். எரிபொருளுக்கு 0.5%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் 0.7%, பல்பொருள் அங்காடிக்கு 0.9%, Mutual Fund, அரசு, காப்பீடு, ரயில்வேக்கு 1% ஆக கட்டணம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications