சென்னை போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு! ரூ.400 கோடியில் வரும் பிரம்மாண்ட பேருந்து முனையம்.. எங்கே?
சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் புதிய முனையம் அடுத்த சில தினங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த முனையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் (SETC) சேர்ந்த 66 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த 268 பேருந்துகளும் அடங்கும். மேலும், சேலம் கோட்டத்திலிருந்து 35 பேருந்துகளும், கர்நாடக மாநிலப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 53 பேருந்துகளும், 14 தனியார் பேருந்துகளும் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்பட உள்ளன. இது தவிர, தற்போது கோயம்பேட்டில் இருந்து ஈ.சி.ஆர் (ECR) வழியாக இயக்கப்படும் 216 பேருந்துகளும் இனி குத்தம்பாக்கம் முனையத்தில் இருந்தே தங்களது பயணத்தைத் தொடங்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம்
ஏற்கனவே ஏற்கனவே பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளை பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவரின் துறைசார்ந்த முன்னோடித் திட்டங்கள் பிரிவின் கீழ் வரும் 27 திட்டங்களின் தற்போதைய முன்னேற்றத்தை திடீரென ஆய்வு செய்தார். அந்த திட்டங்களை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, முன்னோடித் திட்டங்களின் எண்ணிக்கை முன்பு 155 ஆக இருந்தது. தற்போது இது 24 துறைகளின் கீழ் 288 திட்டங்களாக உயர்ந்து, ஒட்டுமொத்தமாக ₹3,17,693 கோடி செலவில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் 85 திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே நிறைவுபெற்றுவிட்டன; எஞ்சியவை பல்வேறு நிலைகளில் இருக்கின்றன.
திருவள்ளூர் அருகே 24.8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், மேற்கு நோக்கிச் செல்லும் புறநகர் சேவைகளைப் பூர்த்தி செய்யும். இந்தத் திட்டத்தில் பேருந்துகள் நிறுத்துவதற்காக ஒன்பது ஏக்கர் நிலம், ஒரு காவல் நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை-4 உடன் முனையத்தை இணைக்கும் 18.2 ஏக்கர் அணுகல் சாலை ஆகியவை அடங்கும். அங்கே தற்போது சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தற்போது கட்டிடங்களுக்கு வண்ணம் பூசும் பணிகளும், இறுதிக்கட்ட மின்சாரப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த முனையம் திறக்கப்பட்டால், நகரின் உட்பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய நகரங்களுக்கான பேருந்து சேவை
குத்தம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து முக்கியமாக மேற்கு மற்றும் தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களான கர்நாடகாவின் பெங்களூரு, ஆந்திராவின் திருப்பதி மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
பேருந்து போக்குவரத்து மாற்றம்: விரிவான விவரங்கள்
புதிய முனையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில், போக்குவரத்துத் துறை பல்வேறு முக்கிய மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளது. அதன்படி, பூந்தமல்லி வழியாகச் செல்லும் மொத்தம் 436 பேருந்துகள் இனி குத்தம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட உள்ளன.
இந்த மாற்றங்களின் மூலம், கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று சென்னை மாநகர வாசிகள் மற்றும் பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications