இனி குடித்துவிட்டு வந்தால் பேசாம சாப்பிட்டு படுத்துடுங்க! மனைவிகிட்ட வார்த்தையை விட்டால் ஜெயில்தான்
சென்னை: குடித்துவிட்டு வந்து அடிப்பது என்றில்லை, நாராசமான வார்த்தைகளால் திட்டினால் கூட இனி சிறைதான் என புதிய பாரதிய நியாய சமிதா பிரிவு 85 இன் படி தெரிவித்துள்ளது. இதனால் இனி உஷாராக இருங்கள்.

தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை ஒழிக்க வேண்டும் என பெண்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த மதுவால்தான் பலாத்காரம், கொலை, கொள்ளை உள்ளிட்ட செயல்கள் நடக்கின்றன என்றும், மதுபான கடைகளை மூடினால் இவை பெருமளவு தவிர்க்கப்படும் என்றும் கூறி வருகிறார்கள்.
இது எல்லாவற்றுக்கும் மேல் குடித்துவிட்டு வந்து மனைவி, பிள்ளைகளை அடிக்கும் கணவன்மார்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இதனால் மனைவி கோபித்துக் கொண்டு செல்வதும், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாவதும்தான் கொடுமையிலும் கொடுமை.
சில சமயங்களில் குழந்தைகளுடன் தாயும் தற்கொலை செய்து கொள்ளும் கொடூரமும் நடந்தேறுகிறது. குடித்துவிட்டு வந்து மனைவியின் நடத்தையின் மீது சந்தேகிப்பது, இதை தட்டிக் கேட்டால் மனைவியை நடுரோட்டில் இழுத்து போட்டு அடித்து உதைப்பது, இதனால் அந்த மனைவி அந்த தெருவில் எப்படி நடமாட முடியும் என்பதை இந்த கணவன்மார்கள் யோசிப்பதே இல்லை.

எல்லாவற்றையும் செய்துவிட்டு காலையில் ஒன்றுமே நடக்காதது போல் இருப்பதையும் நாம் கண்டிருக்கிறோம். அதிலும் குடித்துவிட்டால் அவர்கள் பேச்சில் எத்தனை நாராசம்! காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் மனைவி, அவர் குடும்பத்தினரையும் சேர்த்து இழுத்து நாறடித்து விடுவார்கள்.
பொதுவாக குடித்துவிட்டு அடித்தால் அதை domestic violence கேஸ் கொடுக்கலாம். ஆனால் காவல் நிலையத்தில் மனைவி புகாரின் பேரில் கணவரை அழைத்து விசாரித்தால், "அப்படியா சார் இல்லவே இல்லை, பொண்டாட்டியை அடித்தது போல் நியாபகம் இல்லையே! குடித்துவிட்டதால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை சார்" என பூசி மெழுகுவார்கள்.
ஆனால் தற்போது புதிதாக வந்த பிஎன்எஸ் சட்டத்தில் இது போன்று செய்ய முடியாது. இந்த புதிய பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் 85-இன்படி கணவரோ அவரது உறவினர்களோ வாழ வந்த பெண்ணை தாக்கினாலோ அல்லது கொடுமைப்படுத்தினாலோ அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என இந்த சட்டம் சொல்கிறது.
அந்த வகையில் கணவர் அல்லது அவரது உறவினர்கள் மனைவியை உடல் அல்லது மனரீதியாக துன்புறுத்தினால் அதை "Cruelty/கொடுமை" என்று கருதி தண்டனை அளிக்கிறது. மேலும் மது அருந்திவிட்டு அவமதிப்பு, அடிதடி, மிரட்டல், கடுமையான திட்டல் போன்றவை நடந்தாலும் "குடித்திருந்தேன்" என கூறி இனி தப்பிக்க முடியாது. தண்டனையாக அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை+ அபராதம் விதிக்கப்படும்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications