நிலுவைத் தொகை கட்டாவிட்டால் அபராதம்? அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு செக் வைக்கும் மசோதா
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சட்ட மசோதா அனைத்து குடியிருப்புகளுக்கும் குடியிருப்போர் நல சங்கங்களை உருவாக்க கட்டாயமாக்கியுள்ளது.
தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சட்டம் - 2022' என்ற புதிய மசோதாவை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா சட்டமாக தாக்கல் செய்யப்பட்டால் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் பழைய சட்டத்துக்கு மாற்றாக இந்த சட்டம் அமலுக்கு வரும்.

இந்த புதிய சட்டம் 4 அல்லது அதற்கும் மேற்பட்ட கட்டிடங்களை கொண்ட குடியிருப்பு வளாகங்களை நிர்வகிக்க குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு அனுமதி வழங்குகிறது. அதேபோல் குடியிருப்போர் நலச்சங்கங்களை புதிய சட்டத்தின் மூலமாக மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற விதியை இந்த மசோதா கொண்டு வருகிறது.
புதிய மசோதா சட்டமாக்கப்பட்டால் ஒரு குடியிருப்பு திட்டத்திற்கு ஒரு சங்கத்தை மட்டுமே அமைக்க முடியும். அதே நேரம் தனித்தனியாக குடியிருப்போர் நலச்சங்கங்களை உருவாக்கி கூட்டமைப்பை ஏற்படுத்த அனுமதி வழங்குகிறது. குடியிருப்பு திட்டத்தில் பொதுவான இடங்கள் மற்றும் வசதிகள் தொடர்பாக ஒரே ஒரு உறுதிமொழியை கட்டாயம் பதிவிட வேண்டும்.
குடியிருப்பு நலச் சங்கம் அமைப்பதற்கு பதிவும் உறுதிமொழியும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் நிலுவைத் தொகைகளை செலுத்த தவறினால் அவருக்கு அபராதம் விதிக்க இந்த புதிய மசோதா அனுமதி வழங்குகிறது.
குடியிருப்பின் மூன்றில் 2 பங்கு உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டாலோ அல்லது குடியிருப்பு பழுதடைந்து அங்கு வசிக்கும் மக்கள் அல்லது வேறு சிலருக்கு உயிருக்கு ஆபத்தாக இருந்தாலோ அதை மீண்டும் கட்ட வேண்டும் என இந்த புதிய மசோதா கூறுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications