புதிய தலைமை செயலக முறைகேடு: அரசாணை ரத்து செய்ததை எதிர்த்த அப்பீல் மனு மீது தீர்ப்பு ஒத்தி வைப்பு
சென்னை: புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய அரசின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு உத்தரவை ரத்து செய்தார்.

இதை எதிர்த்து, அதிமுக ஆட்சியில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. தற்போது, திமுக ஆட்சி அமைந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்பப் பெற தமிழக அரசு அனுமதி கோரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி ஜெ.ஜெயவர்த்தன், இணைப்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, பொது நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்கை வாபஸ் பெற அரசுக்கு அதிகாரம் இல்லை.
முறைகேடு புகார் தொடர்பாக புலன் விசாரணை நடத்தி, அது முடிவு காண அனுமதிக்க வேண்டுமே தவிர, புலன் விசாரணையை அரசு கைவிட முடியாது. மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற மாநில அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வாதிட்டார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற்றாலும், இணைப்பு மனுதாரருக்கு மாற்று நிவாரண வழிகள் உள்ளன. வழக்கை வாபஸ் பெறுவது அரசின் முடிவு எனக் குறிப்பிட்டார்.
ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், ஜெயவர்த்தன் இணைப்பு மனுவை ஏற்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய தமிழக அரசின் மனு மீதான தீர்ப்பை, நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications