புதிய தலைமைச் செயலாளர்! ஃபைனல் லிஸ்டில் 3 மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்! ஸ்டாலின் சாய்ஸ் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமைச் செயலாளர் இறையன்புவின் பதவிக்காலம் நாளை மறுதினத்துடன் முடிவடையும் நிலையில் தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது..

சிவ்தாஸ் மீனா, ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் ஆகிய மூன்று மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர் தான் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளன.

New Chief Secretary! 3 senior IAS officers in the final list! Do you know who is Stalins choice?

அதிலும் குறிப்பாக தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக இருக்கும் சிவதாஸ் மீனா தான் முதல்வர் ஸ்டாலினின் சாய்ஸில் முதலிடத்தில் இருப்பதாகவும் அதற்கு அடுத்த இடத்தில் தான் ஹன்ஸ்ராஜ் வர்மாவும், பிரபாகரும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு பணியிலிருந்த சிவதாஸ் மீனா ஐ.ஏ.எஸ்., கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு ஸ்டாலின் அழைப்பை ஏற்று மாநில அரசு பணிக்கு திரும்பியவர்.

எஸ்.கே.பிரபாகரை பொறுத்தவரை கடந்த அதிமுக ஆட்சியில் உள்துறை செயலாளர் என்ற பவர்ஃபுல் பதவியில் இருந்தவர். ஹன்ஸ்ராஜ் வர்மாவை பொறுத்தவரை அவரும் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அரசின் பல்வேறு துறைகளை நிர்வகித்த அனுபவம் கொண்டவர்.

இறையன்புவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் அவர் அதனை விரும்பவில்லை என்றும் ஓய்வுக்கு பிறகு ஆலோசகராக வேண்டுமானால் தொடர்வதற்கு இசைவு தெரிவித்திருக்கிறார் எனவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளை இரவோ அல்லது நாளை மறுதினமோ தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+