• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அதெப்படி வீரப்பன் சமாதிக்கு போகலாம்? திமுக எம்.பி. செந்திலை வளைக்கும் சர்ச்சை!

|
  Veerappan The Sandal Smuggler 15 Year Death Memorial Day

  சென்னை: திமுகவின் இளம் எம்.பி.க்களில் ஒருவரான டாக்டர் செந்தில், சந்தனக் கடத்தல் வீரப்பன் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

  தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் திமுகவின் டாக்டர் செந்தில். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருபவர். தொகுதிகளிலும் பம்பரமாக சுழன்று வருகிறவர்.

  விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி பிரசாரத்தின் போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எம்.பி. அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். தற்போது வீரப்பன் நினைவிடத்துக்கு சென்ற விவகாரத்தில் சர்ச்சைகள் இவரை வளைத்துள்ளது.

  அடுத்த ஒன்றரை மாதத்தில் ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு- ஈபிஎஸ் பதவி விலகுவார்: மு.க.ஸ்டாலின்

  சந்தன வீரப்பன் நினைவிடத்தில்..

  டாக்டர் செந்தில் தமது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 18-ந் தேதி, இன்று #சந்தன_வீரப்பன் நினைவிடத்தில் அவர் குடும்பத்தினர் உடன்., #அவர்_வாழ்விணையர்., #இரண்டு_பெண்கள் அவர்கள் குடும்பத்துடன். என பதிவிட்டிருந்தனர். அத்துடன் வீரப்பன் சமாதியில் அஞ்சலி செலுத்திய படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.

  எம்.பி. இப்படி செய்யலாமா?

  டாக்டர் செந்திலின் இப்பதிவுக்கு மிகக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. @nellaiseemai என்பவர், என்னதான் தனிப்பட்ட மனிதராக கலந்து கொண்டாலும், சட்டத்தின் முன் குற்றவாளியான ஒருவருக்கு, எத்தனையோ காவலர்களின் குடும்பத்தில் இழப்பை ஏற்படுத்தியவருக்கு இப்போது மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நீங்கள் நினைவஞ்சலி செலுத்தியதை பொதுவெளியில் பகிர்ந்திருக்க வேண்டாம் என ஆதங்கப்பட்டிருக்கிறார்.

  ரோல்மாடலான நீங்க இப்படி?

  @samdoss6 என்ற பதிவர், பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக உள்ள ஒரு எம்பி ..ஒரு கடத்தல் கொள்ளைக்காரன் சமாதிக்கு செல்வது சரியல்ல.. இளைஞர்களை தவறான பாதைக்கு வித்திடும்.. என விமர்சித்திருக்கிறார்.

  போலீசை கேவலப்படுத்திட்டீங்க

  @padmanan என்ற ட்வீட்டிஸ்ட், பணியிலிருக்கும்போதே வீரப்பனால கொடுரூரமாக கொல்லப்பட்ட காவலர்களை ஒரு எம்பி இதற்குமேல் கேவலப்படுத்த முடியாது! வாக்கு அரசியலின் கொடூர முகத்தின் இன்னொரு பக்கம் என கொந்தளித்து பதிவிட்டிருக்கிறார்.

  எம்.பி.க்கு ஆதரவு

  அதேநேரத்தில் @kavitha129 என்ற ட்வீட்டிஸ்ட், இந்த டுவீட்டுக்கு கீழ quoteல தனியானு புலம்பிட்டு இருக்குறவங்களுக்கு... இவரொன்னும் அதிமுக பாஜக ஆளு கிடையாது ஓட்டு போட்டவங்க தன் ஆளுங்கனு மட்டுமே பார்த்து பழக ஒரு எம்பியா தொகுதி மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர் Rigid 'அரசியல்' கூட்டத்திலிருந்து வெளிவாருங்கள் மக்களே என்று வேறு ஒரு கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளார்.

  ஏன் சமாதியில் வணக்கம்

  இத்தனை விமர்சனங்களுக்கும் டாக்டர் செந்தில் இதே பதிவில் விளக்கமும் அளித்திருக்கிறார். அதில், வீரப்பன் மனைவி கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் எனக்கு தேர்தல் பிரசாரம் செய்தார். அவரது அழைப்பின் பேரில் வீரப்பன் சமாதிக்கு இன்று சென்றேன். வாழ்க்கையில் பெரும் இன்னல்களை எதிர்கொண்ட வீரப்பன் மனைவி மற்றும் அவரது இரண்டு மகள்களுக்கு என்றும் ஆதரவாக இருப்பேன் என கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  A new controvers erupted over DMK MP Senthi who paid homage to sandalwood smuggler veerappan.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more