Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மர்மம் விலகுது.. பூமிக்கு அருகே வந்த 3I/ATLAS விண்மீனுக்கும்.. Wow சிக்னலுக்கும் தொடர்பு? ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரிய குடும்பத்திற்குள் நுழைந்து இருக்கும் விண்மீன் தோற்றம் கொண்ட மர்ம பொருளான 3I/ATLASஐ பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், அதற்கும் சர்வதேச அளவில் இன்னமும் புதிராக இருக்கும் வாவ்! சிக்னலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். அதாவது வாவ் சிக்னல் இந்த விண்மீனில் இருந்து வந்து இருக்குமா? அல்லது இந்த விண்மீன் - வாவ் சிக்னல் இரண்டும் ஒரே சோர்ஸில் இருந்து வந்து இருக்குமா என்ற கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

ஆகஸ்ட் 1977-ல், வானியலாளர் ஜெர்ரி எஹ்மான், ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் 'பிக் இயர்' ரேடியோ தொலைநோக்கியில் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். விண்வெளியில் இருந்து வரும் பல்வேறு அலைவரிசைகளில் இருந்து கிடைத்த தரவுகளை ஆய்வு செய்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு தெரியாது.. உலகின் மிகப்பெரிய புதிரை அவர் அறிமுகம் செய்ய போகிறார் என்று.

space

சக்திவாய்ந்த ரேடியோ சிக்னல்

அவர் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, ஒரு சக்திவாய்ந்த, குறுகிய அலைவரிசை ரேடியோ வெடிப்பைக் கண்டுபிடித்து வரலாற்றைப் படைத்தார். திடீரென கிராஃபில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது. அதில் குறுகிய அலைவரிசை கொண்ட ரேடியோ அலைகள் பதிவானது.

இதை ஆய்வு செய்த அவர் கிராஃபில்.. அந்த அலைக் கற்றையைச் சுற்றிக் காட்டி, சிவப்பு மையினால் "வாவ்!" என்று ஒற்றை வார்த்தையை எழுதினார். அவர் அந்த அலைவரிசையை பார்த்து வியந்து போய் வாவ்! என்று குறிப்பிட்டார். அவர் எதையோ உணர்ந்து கொண்ட பின்பே வாவ் என்று எழுதி இருந்தார். இந்த விவரிக்க முடியாத விண்வெளி சிக்னலுக்கு, இந்த வார்த்தையே இப்போது பிரபலமான பெயரானது. அப்போதில் இருந்தே இது வாவ்! சிக்னல் அளிக்கப்படுகிறது!

வாவ் சிக்னல்

72 விநாடிகள் நீடித்த இந்த சிக்னல், 1420.406 MHz (ஹைட்ரஜன் அலைவரிசை) என்ற அலைவரிசையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. விண்வெளியின் ஆழத்திலிருந்து இந்த அலைவரிசை வந்ததாகத் தோன்றியது. பல ஆண்டுகளாக தேடியும், இப்போது வரை இந்த சிக்னல் மீண்டும் கண்டறியப்படவில்லை. அதன்பின் பல ஆராய்ச்சியாளர்கள், செயற்கைகோள்கள், விண்வெளி ஆய்வு மையங்கள் தேடியும் கூட இந்த சிக்னலை கண்டறிய முடியவில்லை.

இப்போது, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய கோட்பாடு உருவெடுத்து உள்ளது. அந்த சிக்னல் குறித்த புதிய விவாதம் எழுந்துள்ளது. அதன்படி சூரிய குடும்பத்திற்குள் நுழைந்து இருக்கும் மர்ம விண்மீன் தோற்றம் கொண்ட 3I/ATLAS பொருள் பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், இதற்கும் சர்வதேச அளவில் இன்னமும் புதிராக இருக்கும் வாவ் சிக்னலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

அதாவது வாவ் சிக்னல் இந்த விண்மீனில் இருந்து வந்து இருக்குமா? அல்லது இந்த விண்மீன் - வாவ் சிக்னல் இரண்டும் ஒரே சோர்ஸில் இருந்து வந்து இருக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

3I/ATLAS விண்மீனில் இருந்து வந்து இருக்குமா

ஹார்வர்ட் வானியலாளர் அவி லோப் கூறுகையில், இந்த மர்ம விண்மீன் உண்மையிலேயே 'வாவ்! சிக்னல்' வந்த அதே திசையில் இருந்து வந்திருந்தால், 1977-ன் ரேடியோ சிக்னலுக்கும், இந்த விண்மீனுக்கும் இடையில் தொடர்பு இருந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று கூறி உள்ளார்.

3I/ATLAS என்ற விண்மீன் போன்ற தோன்ற கொண்ட மர்ம பொருள் நமது சூரிய மண்டலத்திற்குள் நுழைந்து கடந்த சில வாரங்களாக சுற்றி வருகிறது. இது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சூரியனுக்கு பின்புறம் இது பயணம் செய்து கொண்டு இருக்கிறது. இது இயற்கையானதா? அல்லது இதன் பின் செயற்கை ஆற்றல் இருக்கிறதா என்ற கேள்விகள் நிலவுகின்றன.

3I/ATLASல் நீடிக்கும் மர்மம்

2025 நவம்பர் 27 முதல் 2026 ஜனவரி 27 வரை, உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள், இந்த பொருளின் பாதை, அதன் கலவை மற்றும் செயல்பாடு, நகரும் திசையை ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்வதற்காக, இதை ஒரே நேரத்தில் கண்காணிப்பார்கள். இதில் மிகவும் முக்கியமான தருணம் நாளைதான்.. அதாவது அக்டோபர் 29, 2025 அன்று வரும். அப்போது 3I/ATLAS சூரியனுக்கு மிக அருகில் வரும். இந்த நிகழ்வு மூலம் அந்த விண்மீனை இயற்கையானதா? அல்லது செயற்கையானதா? என்பதை கண்டறிய உதவும்.

சூரியனைக் கடந்து செல்லும்போது, உலகெங்கிலும் உள்ள தொலைநோக்கிகள், அதன் பிரகாசம், வேகம் அல்லது பாதை ஆகியவற்றில் ஏற்படும் திடீர் மாற்றங்களை கண்காணிக்கும்.

3I/ATLAS ஒரு தொழில்நுட்பப் பொருளாக, அதாவது ஒரு விண்வெளி ஆய்வு கருவியாக இருந்தால், அது சூரியனின் வெப்பத்தையும் ஈர்ப்பையும் பயன்படுத்தி திசையை மாற்றலாம், இயற்கையான பொருளாக இருந்தால் சூரியனின் ஈர்ப்பு விசையால் சூரியனை நோக்கி இழுக்கப்படலாம். இந்த விண்மீன் எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்து மர்மங்கள் விலகும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் வாவ்! சிக்னல் தோன்றிய திசைக்கும் இதற்கும் உள்ள தொடர்பு குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஹைட்ரஜன் அலைவரிசை என்றால் என்ன?

முன்பு 72 விநாடிகள் நீடித்த வாவ்! சிக்னல், 1420.406 MHz (ஹைட்ரஜன் அலைவரிசை) என்ற அலைவரிசையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஹைட்ரஜன் அலைவரிசை, 21 சென்டிமீட்டர் அலைவரிசை என்றும் அழைக்கப்படுகிறது. இது 1420.406 மெகாஹெர்ட்ஸ் (MHz) அல்லது சுமார் 21 சென்டிமீட்டர் அலைநீளம் கொண்ட ஒரு குறிப்பிட்ட ரேடியோ அலைவரிசையாகும். இது அண்டத்தில் மிகவும் பொதுவான தனிமமான ஹைட்ரஜன் அணுக்களால் இயற்கையாகவே உமிழப்படுகிறது.

ஒரு ஹைட்ரஜன் அணுவில் ஒரு புரோட்டான் மற்றும் ஒரு எலக்ட்ரான் இருக்கும். சில சமயங்களில், எலக்ட்ரான் தனது திசையை மாற்றும்போது, சிறிய அளவு ஆற்றலை ஒரு ரேடியோ அலையாக வெளியிடுகிறது. இது எப்போதும் 1420.406 MHz அலைவரிசையில்தான் இருக்கும். விண்வெளியில் ஹைட்ரஜன் எங்கும் பரவியிருப்பதால், வானியலாளர்கள் இந்த அலைவரிசையைப் பயன்படுத்தி, விண்மீன் கூட்டங்களில் உள்ள ஹைட்ரஜன் மேகங்களை வரைபடமாக்குகிறார்கள்.

அத்துடன் பால்வீதியின் அமைப்பை ஆய்வு செய்கிறார்கள். மனிதர்கள் அல்லாத உலகில் இருக்கும் மற்ற மேம்பட்ட நாகரிகங்கள் இந்த அலைவரிசையின் முக்கியத்துவத்தை அறிந்து, விண்மீன் மண்டலங்களுக்கு இடையேயான தொடர்புக்கு இதை வேண்டுமென்றே பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஆகஸ்ட் 1977-ல் கிடைத்த சிக்னல், இந்த அலைவரிசையில் சரியாக வந்தது. துல்லியமாக அந்த அலைவரிசையில் இந்த சிக்னல் வந்ததால் வேறு உலகில் வேறு உயிரினங்கள் இதை அனுப்பி இருக்கலாமா என்ற சந்தேகத்திலேயே வாவ்! என்று இந்த சிக்னலுக்கு பெயரும் வந்தது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+